பதினெட்டாவது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா வருகிற மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சமீபத்தில் ரஜத் பட்டிதாரை புதிய கேப்டனாக அறிவித்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் ரஜித் பட்டிதாரை கேப்டனாக நியமித்ததற்கான சில காரணங்களை கூறியிருக்கிறார்.
பெங்களூர் அணிக்கு கடந்த இரண்டு வருடங்களாக கேப்டனாக செயல்பட்ட பாப் டூ பிளஸ்சிசை வயதின் காரணமாக இந்த முறை தக்க வைக்க விரும்பவில்லை. மாறாக அணிக்கு வலு சேர்க்கக்கூடிய திறமையான மற்றும் சிறப்பான இளம் வீரர்கள் இந்த முறை வாங்கப்பட்டுள்ளனர். எனவே இந்த முறை விராட் கோலி கேப்டனாக பெங்களூர் அணிக்கு செயல்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இறுதிக் கட்டத்தில் பெங்களூர் அணி ரஜத் பட்டிதாரை கேப்டனாக நியமித்தது.
மேலும் பட்டிதார் கேப்டனாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விராட் கோலி அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் பட்டி தார் நியமிக்கப்பட்டதற்கான முக்கிய காரணமாக விராட் கோலி இருந்திருக்கலாம் என சில விஷயங்களை கூறியிருக்கிறார். மேலும் பட்டிதார் பெங்களூர் அணியின் கேப்டனாக பேப்பரில் வெளிப்பட்டாலும் இன்னமும் ஆர்சிபியை வழிநடத்தக்கூடிய வழிகாட்டியாக விராட் கோலி செயல்படுவார் என சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” விராட் கோலி இந்த முறை பெங்களூர் அணியின் கேப்டனாக வருவார் என்று நினைத்தேன். ஏனென்றால் டூ பிளஸ்சிசை அவர்கள் திரும்ப வாங்க முயற்சிக்காத போது விராட் கோலியுடன் உரையாடி இருக்கலாம் என்று நினைத்தேன். விராட் கோலி கேப்டன் ஆக இல்லாவிட்டாலும் ஆர்சிபி அணியை வழிநடத்தக்கூடிய விதத்தில்தான் இன்னும் இருக்கிறார். அவர் ஒரு வீரரை வேண்டும் என்று கேட்டால் நிர்வாகம் அந்த வீரரை ஆதரிக்கிறது.
இதையும் படிங்க:டக்கெட் பொய்யா காமெடி பண்றத நிறுத்தனும்.. 4 வருஷமா நிலைமை ரொம்ப மோசமா இருக்கு – அஸ்வின் பேச்சு
பட்டிதார் இப்போது கேப்டனாக மாறிவிட்டதால் கோலி இந்த முடிவை எடுப்பதில் ஈடுபட்டிருப்பார் என்ற உறுதியான நம்புகிறேன். 18 வருடங்களாக கோப்பையை வெல்லாத அணி இன்னும் விராட் கோலியுடன் தொடர்கிறது. ஏனென்றால் விராட் கோலி மற்றும் ஆர்சிபி இரண்டிற்கும் இடையே ஆழமான தொடர்பு உள்ளது. அவர்கள் எந்த கோப்பையையும் இல்லாவிட்டாலும் விராட் கோலி இந்த அணிக்கு மரியாதை மற்றும் பிராண்ட் மதிப்பை கொண்டு வருகிறார். மேலும் ஒரு முறை கூட இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்” என கூறி இருக்கிறார்.