கம்பீர் கை வைக்கப் போறது சாம்சன் மேலே கிடையாது.. இந்த ஆச்சரியம் காத்துட்டு இருக்கு – முகமது கைப் தகவல்

0
46
Kaif

அடுத்த வாரத்தில் துவங்க இருக்கும் ஆசிய கோப்பை டி20 தொடரில் சஞ்சு சாம்சனை கம்பீர் நிச்சயம் கைவிடமாட்டார் என்று முகமது கைப் தெரிவித்திருக்கிறார்.

தற்போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் துவக்க ஆட்டக்காரராக துணை கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கும் கில் அபிஷேக் சர்மாவுடன் களம் இறங்குவார் என்று தெரிகிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் தனது இடத்தை இழப்பார், மேலும் விளையாட வாய்ப்பும் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

டாப் 10 சிக்ஸர்

இது குறித்து முகமது கைப் பேசும்பொழுது “ஆசிய கோப்பையில் கில் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவார்கள். ஆனால் மூன்றாவது இடத்தில் விளையாடும் திலக் வர்மா இளம் வீரர் என்பதால் அவருடைய வாய்ப்புக்கு காத்திருக்க வேண்டும். அனுபவ பேட்ஸ்மேன் சாம்சனுக்கு வாய்ப்பு தருவதின் மூலம் அடுத்து வரக்கூடிய உலகக் கோப்பைக்கு தயார் படுத்த முடியும்”

“ஐபிஎல் தொடரில் டாப் 10 சிக்ஸர் அடிப்பவர்களில் சாம்சன் ஒருவர். அதனால்தான் மிடில் ஓவர்களில் ரஷித் கான் பந்து வீச வரும்பொழுது சஞ்சுவை விட சிறந்த வீரர் அங்கு யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் அவரால் தரையில் சிக்சர் அடிக்க முடியும்”

- Advertisement -

மூத்தவரே சாம்சன் தான்

“தற்போதைய ஆசிய கோப்பை இந்திய அணியில் மிகவும் மூத்தவர் யார் என்று தெரியுமா? சஞ்சு சாம்சன் தான் மிகவும் மூத்தவர். அவர் 2015 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகம் ஆகிவிட்டார். மேலும் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அவரும் ஒரு அங்கமாக இடம்பெற்றும் இருந்தார்”

இதையும் படிங்க : 169 ரன்.. பாகிஸ்தானை ஓடவிட்ட ஆப்கானிஸ்தான் அபார வெற்றி.. 2வது போட்டியில் பதிலடி.. முத்தரப்பு தொடர்

“ஆனால் அவருக்கு விளையாட வாய்ப்பு. வாய்ப்பு கிடைத்த பொழுது மிகவும் வேடிக்கையாக ரன் குவித்தார். சாதாரணமாக 400 ரன்கள் தாண்டி எடுத்தார். தற்போது கேரள லீக்கில் சிறப்பாக விளையாடிய ரன் குவித்து சிறந்த பார்மில் இருந்து வருகிறார். எனவே கம்பீர் அவரை விளையாட வைப்பார் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -