169 ரன்.. பாகிஸ்தானை ஓடவிட்ட ஆப்கானிஸ்தான் அபார வெற்றி.. 2வது போட்டியில் பதிலடி.. முத்தரப்பு தொடர்

0
78
Afghanistan

முத்தரப்பு t20 தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுத்திருக்கிறது.

தற்போது யுஏஇல் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் யுஏஇ என மூன்று நாடுகள் விளையாடும் முத்தரப் டி20 தொடர் ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாக நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்திருந்தது.

- Advertisement -

ஆப்கனை காப்பாற்றிய ஜோடி

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடி ஆட்டக்காரர் குர்பாஸ் 10 பந்துகளில் 8 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து செடியுல்லா அடல் 45 பந்துகளில் 64 ரன்கள், இப்ராகிம் ஜட்ரன் 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார்கள். இந்த ஜோடி 80 பந்துகளில் 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதற்கு அடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்கத்தில் ரன் அடிக்கவில்லை. 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் பாகிம் அஷ்ரப் 4 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

பாகிஸ்தான் தோல்வி

இதைத்தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 11 வது ஓவரில் முக்கிய ஆறு விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் பகார் ஜமான் 25 ரன்கள், கேப்டன் சல்மான் அலி ஆகா 15 ரன்கள், சையும் அயூப் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்கள்.

இதையும் படிங்க : அந்த காயம் ஆறாது.. 2027 உலகக் கோப்பைக்கு ரோஹித் சர்மாவின் பிளான் இதுதான் – ரகசியம் உடைத்த இர்பான் பதான்

பாகிஸ்தான் அணிக்கு இறுதி கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டும் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் முகமது நபி, ரஷித் கான், நூர் அகமத் மற்றும் பஸருல்லாஹ் பருக்கி தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

- Advertisement -