“ரோகித் ஜெயஸ்வாலுக்கு இதை செஞ்சே ஆகனும்.. அந்த பையன் இன்னும் என்ன செய்வான்” – முகமது கைஃப் ரிக்வெஸ்ட்

0
135
Kaif

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணிக்காக மூன்று வடிவங்களிலும் அடுத்த 10 ஆண்டுகள் விளையாடக்கூடிய வீரராக ஜெய்ஸ்வால் வெளிப்பட்டு இருக்கிறார்.

ஜெய்ஸ்வால் எவ்வளவு அதிரடியாக விளையாடக் கூடிய வீரராக இருந்த போதிலும், அவர் பேட்டிங்கில் புத்திசாலித்தனம் இருக்கக்கூடிய வீரராக இருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சனை கொஞ்சம் கூட அடிக்க முயற்சி செய்யாத ஜெய்ஷ்வால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்தார்.

- Advertisement -

ஒவ்வொரு முறையும் விளையாடும் ஆடுகளமும் ஆட்ட சூழ்நிலையும் எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றது போல் விளையாடி, தன்னை சரிநிலை செய்துகொண்டு அதற்குப் பிறகு தன் இயல்பில் விளையாட ஆரம்பிக்கிறார். இதன் காரணமாக அவர் எப்பொழுது அடிக்கிறார் எப்பொழுது தற்காப்பாக விளையாடுகிறார் என்பது குறித்து எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு எந்த ஐடியாவும் இருப்பதில்லை.

மிகவும் சிறிய வயதில் அபாரமான பேட்டிங் திறமையோடு, நல்ல கிரிக்கெட் அறிவும் இருக்கின்ற காரணத்தினால், தற்போதைய இளம் இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் மிகவும் மதிப்பு மிக்க வீரராக எல்லோராலும் கணிக்கப்பட்டிருக்கிறார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஓய்வுக்குப் பிறகு அவரே இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் முகமது கைஃப் ஜெய்ஸ்வால் குறித்து கூறும் பொழுது “ஜெய்ஸ்வால் காட்டி இருக்கும் சேம்பள் சைஸ் சிறியதுதான். ஆனால் அவரை வெகு நாட்களாக நாம் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் பார்த்து வந்திருக்கிறோம். ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக விளையாடினார். மேலும் அவர் நம்ப முடியாத அளவுக்கு அற்புதமான வீரர்.

- Advertisement -

அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகவில்லை. எனவே அவரை அந்த வடிவத்திலும் உடனே அறிமுகம் செய்ய வேண்டும். கிரிக்கெட்டின் மூன்று வடிவத்தை எடுத்துக்கொண்டு அவரைப் பார்த்தால் எந்த ஒரு இடத்திலும் பேட்ஸ்மேனாக அவருக்கு தாக்குதல் நடத்தி விளையாடவும் தற்காத்து விளையாடவும் எல்லா நுட்பங்களும் இருக்கிறது.

ஜெய்ஸ்வால் மனது வைத்தால் ஒரு போட்டியில் நேராக முதல் கியரில் இருந்து ஆறாவது கியருக்கு செல்ல முடியும். ஒரு டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சனை மூன்று பந்துகள் தொடர்ந்து சிக்ஸர்களுக்கு அடிப்பதன் மூலம் அவர் எவ்வளவு திறமையான பேட்ஸ்மேன் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : “கம்மின்ஸ் டீம் உண்மையில் ஸ்ட்ராங்கா இல்ல.. ரோகித் டீமை ஜெயிக்க முடியாது” – ஆஸி முன்னாள் கேப்டன் பேச்சு

தன் முன்னால் இருப்பது பாஸ் பால் இல்லை ஆண்டர்சன் இல்லை எந்த பந்துவீச்சாளராக இருந்தாலும் அது குறித்து எந்த பயமும் ஜெய்ஸ்வாலுக்கு இல்லை. ஒரு இளைஞர் தன் விளையாட்டு திட்டத்தை இவ்வளவு சரியாக செயல்படுத்துவது என்பது அரிதானது” எனவே ஜெய்ஸ்வால் மிகச் சிறந்த வீரர் எனக் கூறியிருக்கிறார்.