அகர்கர் முதுகுல குத்திட்டாரு.. எல்லாருக்கும் ரோல் மாடல் பையன ஏன் செலக்ட் பண்ணல? – முகமது கைப் விமர்சனம்

0
85
Kaif

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் முக்கியமான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

கடந்த வாரத்தில் இங்கிலாந்து செல்லும் 18 பேர் கொண்ட டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு கில் கேப்டன் ஆகவும் ரிஷப் பண்ட் துணை கேப்டன் ஆகவும் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களை நம்பி முழுக்க முழுக்க சென்று இருக்கிறார்கள்.

- Advertisement -

முதுகுல குத்திட்டாங்க

இது குறித்து முகமது கைப் பேசும்பொழுது ” நீங்கள் இளம் வீரர்களுக்கு ஒரு ரோல் மாடலை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதற்கு ஸ்ரேயாஸ் ஐயரை தவிர சிறந்த உதாரணம் இருக்க முடியாது. அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து தற்பொழுது புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய பெயர் இந்திய அணியில் இடம் பெறவில்லை”

“இதற்கு ஸ்ரேயாஸ் என்ன சொல்கிறார்? ‘பிரச்சனை இல்லை. நான் இது குறித்து ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேன். நான் வருத்தமாகவோ அல்லது சோகமாகவோ இருப்பதாக ஊடகத்தில் காட்ட மாட்டேன். நான் கேகேஆர் அணியில் இருந்தேன் அங்கும் என் முதுகில் குத்தப்பட்டது. நான் இதிலிருந்து எல்லாம் வெளியேறி விட்டேன்’ என்று சொல்கிறார்”

- Advertisement -

சாய் சுதர்சன் எப்படி ஆனவர்?

“ஸ்ரேயாஸ் ஐயர் நீ அமைதியாக இரு உன் மட்டை பேசட்டும் என்று சொல்கிறார். இப்போது அவரைப் பாருங்கள் உலகம் முழுவதும் அவரைப் புகழ்ந்து பேசுகிறார்கள். அவர் புள்ளி பட்டியலில் பஞ்சாப் அணியை முதல் இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஹீரோ இருக்க வேண்டும்”

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. பிளே ஆப் மற்றும் பைனல் அட்டவணை.. மோதிக்கொள்ளும் அணிகள்.. ரிசர்வ் டே உண்டா? – முழு விபரங்கள்

“சாய் சுதர்சன் சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் தற்போது ஐபிஎல் தொடரில் 600 க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்ததால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இப்படி பார்த்தாள் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் என இரண்டிலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ரன்கள் குவித்திருக்கிறார். அவர் கேப்டனாக இருந்து கொண்டு பேட்ஸ்மேன் ஆக 514 ரன்கள் தற்போது எடுத்திருக்கிறார். நீங்கள் வெள்ளைப் பந்து சாதனையை வைத்து ஒரு விரலை தேர்வு செய்வீர்கள், ஆனால் இன்னொரு வீரரை தேர்வு செய்ய மாட்டீர்கள் என்பது சரியானது கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -