நடப்பு 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து பிளே ஆப் சுற்று ஆரம்பிக்க இருக்கிறது. இதற்கான அட்டவணை மற்றும் மோதிக் கொள்ளும் அணிகள் மேலும் ரிசர்வ் டே குறித்த விபரங்களை பார்க்கலாம்.
தற்போது புள்ளி பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி இரண்டு அணிகளும் முதல் இரண்டு இடங்களை பிடித்திருக்கின்றன. இதற்கு அடுத்து குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்திருக்கின்றன.
பிளே ஆப் சுற்று அட்டவணை
தற்போது புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் இறுதிப் போட்டிக்கான முதல் தகுதி சுற்றுப் போட்டியில் விளையாடுகின்றன. இதேபோல் மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடித்த அணிகள் எலிமினேட்டர் சுற்றில் விளையாடுகின்றன. முதல் தகுதி சுற்றில் தோற்ற அணியும் எலிமினேட்டர் சுற்றில் வென்ற அணியும் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதி சுற்றில் விளையாடுகின்றன. வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு இரண்டாவது அணியாக தகுதி பெறும்.
பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் முதல் தகுதி சுற்றும் முல்லன்பூர் மைதானத்தில் நாளை மே 29ஆம் தேதியும், குஜராத் மற்றும் மும்பை மோதிக் கொள்ளும் எலிமினேட்டர் சுற்றுப்போட்டி இதே மைதானத்தில் மே 30ஆம் தேதியும் நடக்கிறது. இதற்கு அடுத்து இரண்டாவது தகுதி சுற்று போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் ஜூன் 1ம் தேதியும் இறுதிப் போட்டி இதே மைதானத்தில் ஜூன் 3ம் தேதியும் நடைபெறுகிறது.
ரிசர்வ் டே உண்டா?
மேலும் முதல் தகுதி சுற்று மற்றும் எலிமினேட்டர் போட்டிகளுக்கு ரிசர்வ் டே கிடையாது. எந்த அணி வெற்றிகள் பெற்று இருக்கிறதோ அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஒரே அளவில் வெற்றிகள் பெற்றிருந்தால் அடுத்த ரன் ரேட் பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 40 ஓவர் மேட்டர்.. நாங்க பண்ற இது காப்பாத்தாது.. இங்கிலாந்து தொடரையும் யோசிக்க மாட்டேன் – ரிஷப் பண்ட் வருத்தம்
இதற்கு அடுத்து இரண்டாவது தகுதி சுற்று மற்றும் இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே கொடுக்கப்படுகிறது. மேலும் ரிசர்வ் டே நாளிலும் போட்டி நடைபெறாமல் போனால், அதிக வெற்றிகளைப் பெற்ற அணி, அதில் சமமாக இருந்தால் ரன் ரேட் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.






