இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் இவர்தான் – உறுதியாக கணித்த மொயின் அலி

0
2892

இந்திய அணியின் டி20 உலக கோப்பை தோல்வியை அடுத்து இந்திய அணிக்கு கார்த்திக் பாண்டியா தான் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர் . உலக கோப்பையின் அரை இறுதி தோல்விக்கு பிறகு ரோகித் சர்மா தன்னுடைய டி20 கேப்டன்சியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரும் சிஎஸ்கே அணியின் வீரருமான மொயின் அலி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் தொடரில்
மோரிஸ் வில்லே அணிக்கு கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் . அவர் ‘அனி’
செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பின்வருமாறு கூறியிருக்கிறார் .

- Advertisement -

அவரிடம் இந்திய அணியின் தோல்வி குறித்து கேட்டபோது ” “இந்திய அணி லெக் ஸ்பின்னர் உடன் ஆடாதது தான் தோல்விக்கு முக்கிய காரணம் “என்று குறிப்பிட்டார் ., இதுகுறித்து விரிவாக பேசியவர் ” நாங்கள் , இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் அவர்கள் 160 ரன்கள் எடுத்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது . இதனால் எங்களது பேட்ஸ்மேன்கள் நம்பிக்கையுடன் ஆடி வெற்றி பெற்றனர்” என்று கூறினார் ,

விராட் கோலி பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில் விராட் கோலி உலகின் சிறந்த வீரர் உலகில் இருக்கும் எல்லா சிறந்த வீரர்களுக்கும் இதே போன்ற சருக்கல்கள் ஏற்படும் ஆனால் அவற்றில் இருந்து எல்லா வீரர்களாலும் மீண்டு வர முடியாது ஆனால் விராட் கோலி அதிலிருந்து சிறப்பாக மீண்டு வந்து நான் ஒரு சிறந்த வீரர் என்பதை நிரூபித்தார்” என்று கூறினார் ,

- Advertisement -

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ” ஹர்திக் பாண்டியா ஒரு சிறந்த கேப்டனாக தெரிகிறார் , மேலும் அவர் தான் முன் நின்று அணியை வழிநடத்தும் விதம் பாராட்டுதலுக்குரியது . நிச்சயமாக ஹர்திக் பாண்டியா இந்தியாவின் டி20 அணியை வழிநடத்த எல்லா திறமைகளும் பெற்றுள்ளதாகவே நான் கருதுகிறேன்” என்று கூறினார் ,

மேலும் அவர் ” ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக இருந்தது . நிச்சயமாக அவர் இந்திய அணியை நல்ல உயரத்திற்கு எடுத்துச் செல்வார்” என்று கூறினார் .

டி10 கிரிக்கெட் போட்டிகள் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ” கிரிக்கெட்டின் இந்த வடிவம் பந்திவீச்சாளர்களுக்கு அபாயகரமான ஒன்று . ஆட்ட நேரம் குறைவாக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் எப்பொழுதும் தாக்குதல் பாணி ஆட்டத்தையே கடைபிடிக்கின்றனர் இதனால் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்” என்று கூறினார் , குறைவான ஆட்ட நேரத்தில் நடைபெறுவதால் போட்டி ரசிகர்களுக்கும் விறுவிறுப்பாக இருப்பதாகவும் கூறினார் .

- Advertisement -