MLC கிரிக்கெட் லீக் நாளை தொடக்கம்.. முதல் போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே? எந்த சேனலில் பார்ப்பது?

0
9017

டி20 கிரிக்கெட்டின் வருகைக்குப் பிறகு உலகம் முழுவதும் கிரிக்கெட் முன் எப்போதும் இல்லாத அளவில் பரவி வருகிறது. கால்பந்து போட்டிகள் எப்படி லீக் போட்டிகளாக உலகம் முழுவதும் நடைபெறுகிறதோ, அதை போல் கிரிக்கெட்டும் வளர்கிறது.

ஐபிஎல் பாணியில் தற்போது அமெரிக்காவில் எம்எல்சி கிரிக்கெட் லீக் ஆட்டம் நடத்தப்படுகிறது. இதில் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக நான்கு ஐபிஎல் அணிகள் அமெரிக்க கிரிக்கெட் லீக் தொடரில் அணிகளை வாங்கி இருக்கிறது.மொத்தம் இந்த தொடரில் ஆறு அணிகள் விளையாடுகிறது.

- Advertisement -

இந்திய நேரப்படி ஜூலை 14ஆம் தேதி காலை 6 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது. இறுதிப் போட்டி ஜூலை 31ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தமே 19 ஆட்டங்கள் தான் முதல் சீசனில் நடைபெறுகிறது ரவுண்ட் ராபின் முறைப்படி ஆறு அணிகளும் தங்களுக்குள் மோதிக் கொள்வார்கள்.

இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும். ஐபிஎல் பாணியில் இரண்டு குவாலிபயர், ஒரு எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டி என போட்டிகள் நடத்தப்படும். இதில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட்ரைடர்ஸ், எம் ஐ நியூயார்க், டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ், டெல்லி அணியை சேர்ந்த சியாட்டல் ஆர்காஸ் ஆகிய நான்கு ஐபிஎல் அணிகளும் சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ், வாஷிங்டன் பிரீடம் என இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் வாங்கியஅணிகளும் இடம்பெறுகிறது.

இந்தப் போட்டி அனைத்தும் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 என்ற டிவி சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆன்லைனில் ஜியோ சினிமாவில் இலவசமாக இந்த தொடரை கண்டு களிக்கலாம். இந்த தொடரில் அம்பத்தி ராயுடு டெக்ஸா சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட இருந்தார்.

- Advertisement -

ஆனால் பி சி சி ஐ யின் விதிகளின் மாற்றத்தால் அவர் விலகினார். நாளை நடைபெறும் முதல் போட்டியில் சிஎஸ்கே வின் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் கேகேஆர் இன் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது.

சிஎஸ்கே வின் டெக்சாஸ் அணியில் டுப்ளசிஸ் கேப்டனாக களம் காண்கிறார். இதேபோன்று டிவான் கான்வே, டேவிட் மில்லர் ,பிராவோ, மிச்செல் சாண்ட்னர்,இம்ரான் தாகிர், டேனியல் சாம்ஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.