என்னை 24.75 கோடிக்கு வாங்கியும் 2 மேட்ச்ல 0 விக்கெட்.. எனக்கு இப்படித்தான் இருந்துச்சு – மிட்சல் ஸ்டார்க் ஓபன் டாக்

0
356

17-வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழா தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட மிச்சல் ஸ்டார்க் இரண்டு போட்டிகளில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

கொல்கத்தா அணி பந்துவீச்சினை பலப்படுத்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் பேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்கை 24.75 கோடிக்கு வாங்கி தன் பந்து வீச்சு கட்டமைப்பை பலப்படுத்தியது. ஆனால் கொல்கத்தா அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க் இரண்டு போட்டிகளில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. மாறாக எட்டு ஓவர்கள் வீசி நூறு ரன்களை கொடுத்து இருக்கிறார்.

- Advertisement -

இதனால் இவர் மீது அதிகப்படியான கிண்டலும்,கேலியும், விமர்சனங்களும் வந்தன. எனவே சிக்கலில் இருந்த ஸ்டார்க் டெல்லி அணியின் மூலம் தனது கலங்கத்தை தொலைத்து இருக்கிறார். விசாகப்பட்டினத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சுனில் நரேன் அதிகபட்சமாக 89 ரன்கள் குவித்தார்.

பின்னர் 273 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் ஆட்டக்காரர்களான சேர்ந்த டேவிட் வார்னர் மற்றும் மிச்சல் மார்ஸ் ஆகிய ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்களை இன்னொரு ஆஸ்திரேலியா அணியைச் சார்ந்த வேகப்பந்துவீச்சாளர் வீழ்த்தி இருக்கிறார். தொடர்ந்து மூன்று ஓவர்கள் பந்து வீசிய ஸ்டார்க் வார்னர் 18 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவரது விக்கட்டையும், மிச்சல் மார்ஸ் ஜீரோ ரன்னிலும் வெளியேற்றினார்.

மிட்சல் ஸ்டார்க் பேட்டி

இதன் மூலம் மூன்று ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இருப்பினும் டெல்லி அணி அதிகப்படியான இலக்கை சசேஸ் செய்ததால் அதிரடியாக விளையாட போய் விக்கெட்டை பறி கொடுத்து இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் விக்கெட்டுகள் எதுவும் வீழ்த்தாமல் டெல்லி அணிக்கு எதிராக இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியது குறித்து கூறிய ஸ்டார்க் “நான் கடந்த இரண்டு போட்டியில் பந்து வீசியதை போலவே டெல்லி அணிக்கு எதிராகவும் பந்து வீசினேன். இந்த போட்டிக்காக எனது பந்துவீச்சு நான் எதையும் மாற்றவில்லை. டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை நீங்கள் சில கைவிடப்பட்ட வாய்ப்புகளை பெறுவீர்கள். ஆனால் அது உங்கள் வழியில் செல்லாது. நாங்கள் இப்போது மூன்று போட்டியில் வெற்றி பெற்ற முன்னிலையில் இருக்கிறோம். அதுதான் இப்போது முக்கியம்.

- Advertisement -

மேலும் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டது குறித்து கேள்வி கேட்கிறீர்கள். நான் முன்பு கூறியதைப் போலவே அதிக விலைக்காக எனது ஆட்டத்தை நான் மாற்றவில்லை. விளையாட்டுக்கள் தற்போது வேகமாக மாறி வருகிறது. டி20 கிரிக்கெட்டுகள் மிருகத்தனமாகவே முடியும். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் அதிர்ஷ்டங்களை இருபுறமும் எடுத்துக் கொள்ளலாம்.பேட்டிங் மற்றும் பந்துவீச்சின் மூலம் நாங்கள் 3-0 என்று நல்ல நிலையில் இருக்கிறோம். தனிப்பட்ட காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அணியின் நலனுக்காக முன்னோக்கி செல்வதே சிறந்தது” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:வெறும் 39 பந்து 85 ரன்.. கிரிக்கெட்டே பேட்டிங்தாங்க.. எனக்கு இது சந்தோசம்தான் – சுனில் நரைன் பேட்டி

கொல்கத்தா அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் இருக்கிறது. மேலும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் தற்போது நெட் ரன் ரேட்டில் மற்ற அணிகளை விட வலுவான நிலையில் இருக்கிறது. எனவே இனி மேற்கொண்டு வரும் போட்டிகளில் கொல்கத்தா சாதாரண வெற்றியை மேற்கொண்டாலே போதும்.