தற்போது ஆசிய கோப்பை இந்திய அணியில் விராட் கோலி இல்லாத காரணத்தினால் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்த நல்ல வாய்ப்பு ஏற்பட்ட இருப்பதாக மிஸ்பா உல் ஹக் கூறியிருக்கிறார்.
இன்று ஆசியக் கோப்பை தொடரில் உலகெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற இருக்கிறது. தற்போது இரண்டு அணிகளுமே ஓரளவுக்கு இளம் அணியாக இருப்பதால் போட்டி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
விராட் கோலியின் தாக்கம்
சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய போட்டிகளில் விராட் கோலி தனி ஒரு வீரராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மேலும் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒவ்வொரு முறையும் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார்.
இதன் காரணமாக விராட் கோலி மீது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எப்பொழுதுமே ஒரு பயமும் மரியாதையும் இருந்து வருகிறது. தற்போது அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால், நீண்ட காலம் கழித்து விராட் கோலி இல்லாமல் பாகிஸ்தான் இந்திய அணியை சந்திக்க இருக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு வெற்றிக்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
விராட் கோலி இல்லை
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பேசும் போது ” தற்போது இந்திய அணியில் விராட் கோலி இல்லாத காரணத்தினால் பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெறுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. இதற்கு சில விஷயங்களை முன்கூட்டியே செய்ய வேண்டும்”
இதையும் படிங்க : பும்ரா முன்னாடி பகார் ஜமான் நிக்கவே முடியாது.. நின்னுட்டா அடுத்து வர இவர் விட மாட்டார் – இர்பான் பதான் பேச்சு
” முதலில் இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கிடைக்காத படி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும். இதற்குப் பிறகு வந்து அணியை நிலை நிறுத்த விராட் கோலி இந்திய அணியில் இல்லை. மேலும் இந்திய பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் இந்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை அதிகம் விளையாடியது இல்லை. எனவே இதைப் பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் அணியால் வெல்ல முடியும். ஆனாலும் பாகிஸ்தான் அணிக்கு சிறந்த தொடக்கம் கிடைக்காவிட்டால் இதை செய்ய முடியாது” என்று கூறியிருக்கிறார்.






