பும்ரா முன்னாடி பகார் ஜமான் நிக்கவே முடியாது.. நின்னுட்டா அடுத்து வர இவர் விட மாட்டார் – இர்பான் பதான் பேச்சு

0
87
Irfan

இன்று இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் பகார் ஜமான் பும்ரா பந்துவீச்சை எதிர்கொண்டு தாண்ட முடியாது என இர்பான் பதான் பேசியிருக்கிறார்.

தற்போதைய பாகிஸ்தான் அணியில் நீண்ட அனுபவம் வாய்ந்தவராக பகார் ஜமான் இருக்கிறார். மேலும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்து பாகிஸ்தான் 2017 ஆம் ஆண்டு கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் இருந்தார்.

- Advertisement -

பும்ராவை தாண்ட முடியாது

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டியை பற்றி பேசும்பொழுது இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கையை நட்சத்திரம் பகார் ஜமான் பும்ரா பந்துவீச்சை தாண்ட முடியாது எனவும், தாண்டினால் இன்னொரு இன்னொரு பந்துவீச்சாளர் விடமாட்டார் என்றும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது ” கடந்த போட்டியில் பார்க்கும்பொழுது பும்ரா கட்டுப்பாட்டுடன் பந்து வீசினார். அவர் மீண்டும் தன்னுடைய பழைய வேகத்திற்கு வந்து விடுவார். மேலும் பாகிஸ்தான் எனும் பொழுது அவர் வேறொரு ஜோனில் இருப்பார். பும்ரா ஸ்பெல்லை பகார் ஜமான் தாண்ட முடியாது. அப்படியே தாண்டினாலும் அடுத்து குல்தீப் யாதவுக்கு எதிராக அவர் விளையாடுவதை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்”

- Advertisement -

பும்ரா ஒரு ராஜா

“பும்ராவுக்கு யார் அறிவுரை கூற முடியும்? அவர் ஒரு ராஜா. அவர் தலைமுறை பந்துவீச்சாளர். அவருக்கு பேட்டர்களை எப்படி செட் செய்ய வேண்டும் என்று தெரியும். எப்போது யார்க்கர் வீச வேண்டும் என்றும் தெரியும். மேலும் பகார் ஜமான் ஒரு இடது கை பேட்ஸ்மேன். இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு இன் ஸ்விங் யார்க்கரை பும்ரா வீசி நாம் பார்த்திருக்கிறோம்”

இதையும் படிங்க : முகமது நவாஸ் தான் சிறந்த ஸ்பின்னரா.. பாக் கோச் பேச்சுக்கு இந்திய பயிற்சியாளர் பக்காவான பதில்

“பும்ரா இந்திய அணிக்கு முதலில் தேர்வாக மிக முக்கிய காரணமாக இருந்தது அவருடைய யார்க்கர்தான். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு போட்டியில் பும்ரா பந்துவீச்சுக்கு வந்த பொழுது பால்க்ணர் ஒரு சிக்சர் அடித்தார். ஆனால் அடுத்த பந்தை யார்க்கராக வீசி அவர் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். இதுதான் அவருடைய ஸ்பெஷல்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -