கிரிக்கெட் விளையாட்டு என்பது இந்தியாவில் பெரும்பான்மையான ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு விளையாட்டு இங்கு வெற்றி என்பது திருவிழாவாகவும் தோல்வி என்பது ஒரு துக்க நிகழ்வு போலவும் கிரிக்கெட் ரசிகர்களால் அனுசரிக்கப்படுகிறது .
இந்தியாவிற்கு முதல் முதலாக உலகக் கோப்பையை வாங்கித் தந்த கப்பில் தேவ் முதல் இந்திய அணிக்கு 50 ஓவர் உலகக் கோப்பை டி20 உலக கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளை வாங்கித் தந்த எம்எஸ் தோனி வரை எத்தனையோ கேப்டன்கள் அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்திருக்கின்றனர்.
சூதாட்ட புகாரில் இருந்து அணியை மீட்டு வலுவான இந்திய அணியை கட்டமைத்த கங்குலி மற்றும் உலக அரங்கில் இந்தியாவை நம்பர் ஒன் அணியாக டெஸ்ட் போட்டிகளில் உலகச் செய்த விராட் கோலி என வெற்றிகரமாக இந்தியாவை வழி நடத்திய கேப்டன்களை வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம் . ஆனால் இதுவரை மூன்று இந்திய கேப்டன்கள் தான் கேப்டனாக இருந்து ஒரு நாள் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இருந்துள்ளனர் அவர்கள் யார் என்று பார்ப்போம் .
அணில் கும்ப்ளே:
ராகுல் டிராவிட் இந்தியாவின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு இந்திய அணிக்கு முழு நேர டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டவர் அணில் கும்ப்ளே. இவரது தலைமையின் கீழ் இந்தியா பல சரித்திர வெற்றிகளை டெஸ்ட் போட்டிகளில் பெற்றிருக்கிறது . எனினும் இவர் இந்திய அணியை ஒரு நாள் போட்டிகளில் ஒரே ஒருமுறை வழிநடத்தி இருக்கிறார் . அந்தப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 2002 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது சென்னையில் வைத்து நடைபெற்ற போட்டிக்கு அணில் கும்ப்ளே கேப்டனாக இருந்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் . இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 217 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது . இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி 46.4 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது . இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசிய அகர்கர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . மேலும் பேட்டிங்கில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் மிகச் சிறப்பான தொடக்கத்தை அமைத்து இந்திய அணி வெற்றி பெற உதவினர்.
அஜிங்கியா ரகானே:
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மனான அஜிங்கியா ரகானே இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் பல வெற்றிகளுக்கு வழி நடத்தி இருக்கிறார் . ஆஸ்திரேலியா அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது விராட் கோலிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்திய அணியை வழிநடத்திய இவர் தர்மசாலாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற உதவினார். மேலும் 2020 ஆம் ஆண்டு இந்திய அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது மெல்போன் மற்றும் பிரிஸ்பேனில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்ய உதவினார். அஜிங்கிய அழகான ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு இந்திய அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது கேப்டனாக செயல்பட்ட ரகானே மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 100% வெற்றியை கொண்ட இந்திய கேப்டன்களில் ஒருவராக இருக்கிறார்.
கௌதம் கம்பீர்:
கௌதம் கம்பீர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிகரமான கேப்டனாக இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2012 ஆம் ஆண்டு மற்றும் 2014 ஆம் ஆண்டு ஆகிய இரண்டு முறை சாம்பியன் பட்டம் வெல்ல உதவியவர். இவர் இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் ஆறு முறை கேப்டனாக இருந்திருக்கிறார். அதில் நியூசிலாந்துக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சர்வதேச போட்டிகளிலும் தன்னுடைய கேப்டன் திறமையை நிரூபித்தார் . மேலும் 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த அவர் அணியை வெற்றி பெறச் செய்தார் . இதன் மூலம் ஆறு போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று 100% வெற்றிகரமான கேப்டனாக இந்தியாவை வழி நடத்தி இருக்கிறார் கௌதம் கம்பீர்.
எம்எஸ் தோனி கங்குலி மற்றும் விராட் கோலி போன்றோர் இந்திய அணிக்கு நீண்ட நாட்களாக கேப்டனாக இருந்தாலும் அவர்கள் அதிக வெற்றிகளையும் சில தோல்விகளையும் பெற்றிருக்கின்றனர் . ஆனால் இந்த அணில் கும்ப்ளே ரகானே மற்றும் கௌதம் கம்பீர் இந்திய அணியை வழி நடத்திய அனைத்து சந்தர்ப்பத்திலும் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்து 100% வெற்றி விகிதம் கொண்ட கேப்டன்களாக இடம் பெற்றுள்ளனர்.