“5வது டெஸ்ட்.. ஸ்டோக்ஸ் தயவுசெய்து இந்த ஜீனியஸ் கூட உட்கார்ந்து பேசுங்க.. புத்தி வரும்” – மைக்கேல் வாகன் அறிவுரை

0
251
Stokes

இங்கிலாந்து அணியின் இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் இறுதி மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகின்ற மார்ச் 7ஆம் தேதி இமாச்சல் பிரதேசம் தரம்சாலா மைதானத்தில் தொடங்கி நடைபெற இருக்கிறது.

இந்தத் தொடரில் நடைபெற்ற முடிந்திருக்கும் நான்கு போட்டிகளில் ஒரு போட்டியை வென்று மூன்று போட்டியை தோற்று, இங்கிலாந்து அணி ஏற்கனவே தொடரை இழந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டம் நடைபெற்று வருகின்ற காரணத்தினால், தொடரை இழந்து இருந்தாலும் கூட புள்ளிகளுக்காக ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் முக்கியமானது.

எனவே இங்கிலாந்து மட்டும் இல்லாமல் இந்திய அணியும் வெற்றியை நோக்கியே கட்டாயம் விளையாடும். இதன் காரணமாக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என்று இல்லாமல், பலமான அணியையே களம் இறக்கி விளையாடும்.

இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் நான்காவது டெஸ்ட் போட்டியில் பாஸ்பால் அணுகுமுறையில் இருந்து வெளியில் வந்து பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறையில் விளையாடி சதம் அடித்து இங்கிலாந்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

- Advertisement -

ஜோ ரூட் பேட்டிங்கால் கிடைத்த முன்னிலையை இங்கிலாந்து மேற்கொண்டு பயன்படுத்திக் கொள்ள முடியாமல், நான்காவது போட்டியை தோற்றதோடு தொடரையும் இழந்தது.

இதனால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியை எப்படி அணுக வேண்டும் என்று மைக்கேல் வாகன் கூறும் பொழுது “இங்கிலாந்து இந்த முறை பழையது போல் தவறுகள் செய்யாது என்று நம்புகிறேன். அவர்கள் இன்னும் கொஞ்சம் கடினமாக போய் இருக்கலாம் என்று கூறுகிறார்கள் ஆனால் நான் அதை ஏற்க மாட்டேன். சில நேரங்களில் இங்கிலாந்து புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும்.

நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் இன்னிங்ஸை எடுத்து பாருங்கள். அவர் டெக்னிக்கலாக விளையாடி பந்தைத் தட்டி பவுண்டரிகள் அடிக்கும் ஆப்ஷன்களை கண்டுபிடித்தார்.

இதையும் படிங்க : “மார்ச் 5ஆம் தேதி வரை வெயிட் பண்ணுங்க.. ஐபிஎல் இந்திய அணிக்கு செம நியூஸ் காத்திருக்கு” – கங்குலி தகவல்

எனவே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கடந்த மூன்று போட்டியில் இல்லாத எது ஒன்றை நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் செய்தார் என அமர்ந்து கேட்க வேண்டும்.ஏனென்றால் அந்தப் போட்டியில் நாம் வித்தியாசமான ஜோ ரூட்டை பார்த்தோம்” எனக் கூறியிருக்கிறார்.