“3வது டெஸ்டில் இதை செய்யுங்க.. வித்தை காட்டறதை விட ஜெயிக்கிறது முக்கியம்” – இங்கிலாந்து அணிக்கு மைக்கேல் வாகன் அறிவுரை

0
108
Vaughan

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட தொடர் ஒன்றுக்கு ஒன்று என இரண்டு போட்டிகளின் முடிவில் சமநிலையில் இருக்கிறது.

இதன் காரணமாக 5 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது மூன்று போட்டிகளாக சுருங்கி விட்டது என்று கூறலாம். அதாவது கடைசி மூன்று போட்டிகளில் எந்த அணி இரண்டு போட்டிகளை வருகிறதோ அந்த அணி தொடரை கைப்பற்றும் என்பதாக மாறி இருக்கிறது.

- Advertisement -

ஒரு பக்கம் இங்கிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சு படை மிகவும் அனுபவம் இல்லாததாக இருக்கிறது. அவர்களுடைய சுழற் பந்துவீச்சு யூனிட்டில் லீச்சை தவிர மற்ற எல்லோரும் மிகவும் இளைஞர்கள். உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் கூட அதிகம் விளையாடாதவர்கள்.

இந்தப் பக்கம் இந்திய அணியை எடுத்துக் கொள்ளும் பொழுது விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல் என மூத்த முக்கிய பேட்ஸ்மேன் இல்லாமல் இந்திய பேட்டிங் யூனிட் வலிமையற்றதாக இருக்கிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் ரோகித் சர்மாவுக்கு அடுத்து அனுபவ வீரராக இருந்தது ரவிச்சந்திரன் அஸ்வின்தான் என்பது இந்திய அணியின் பேட்டிங் யூனிட் எவ்வளவு அனுபவம் இல்லாததாக இருக்கிறது என்று கூறும்.

- Advertisement -

இப்படி மிகவும் அனுபவமற்ற இந்திய அணியிடம் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து தோற்றதும், மேலும் பாஸ் முறையில் விளையாடுவதும், வெற்றியை விட வித்தியாசமான வேலைகளை செய்வதில் ஆர்வம் காட்டுவதும், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனை கோபமடைய வைத்திருக்கிறது.

அவர் கூறும் பொழுது “இங்கிலாந்து அணி பல பெரிய வேலைகளை செய்து கொண்டு, அதே சமயத்தில் வெற்றி பெறாத ஒரு அணியாக போய்விடுமோ என எனக்கு கவலையாக இருக்கிறது.

அவர்கள் உள்நாட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆசஸ் தொடரை வெல்லவில்லை. இப்போது விராட் கோலி போன்ற பெரிய பேட்ஸ்மேன் இல்லாத நிலையிலும் இந்திய அணியை வெல்வதற்கான வாய்ப்பை கோட்டை விட்டு இருக்கிறார்கள். இதனால் இந்தியாவை தொடருக்குள் வர அனுமதித்திருக்கிறார்கள்.

இங்கிலாந்து அணியின் இளம் சுழற் பந்துவீச்சாளர்கள் நன்றாக இருக்கிறார்கள். ஆனாலும் கூட என்னை பொறுத்தவரை ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் ஒல்லி ராபின்சன் விளையாட வேண்டும். இதுதான் சரியான முடிவாக இருக்கும்.

இதையும் படிங்க : “என் அப்பா சொல்றது பொய்.. வாய கிளற வேண்டாம்” – ஜடேஜா கோபமான பேட்டி

மேலும் அணியின் பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்களை பார்த்தோம் சூழ்நிலைகளை பார்த்தும் அதற்கு ஏற்ற வகையில் விளையாட வேண்டும். சில நேரம் பாரம்பரியம் ஆகவும் சில நேரம் தாக்கியும் விளையாடுவதை புரிந்து கொள்ள வேண்டும்” என கூறி இருக்கிறார்.