“என் அப்பா சொல்றது பொய்.. வாய கிளற வேண்டாம்” – ஜடேஜா கோபமான பேட்டி

0
315
Jadeja

இந்திய கிரிக்கெட்டில் தற்காலத்தில் மூன்று வடிவத்திலும் தவறாமல் இடம்பெறக்கூடிய வீரராகவும், அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு இருக்கின்ற மதிப்பும் கொண்ட வீரராகவும் ரவீந்திர ஜடேஜா இருந்து வருகிறார்.

தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை பயணத்தை ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆரம்பித்து, அதன் மூலம் பலரது கவனத்தையும் கவர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்து தோனியின் நம்பிக்கையை பெற்ற வீரராக வளர்ந்தார்.

- Advertisement -

இதற்கு நடுவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கில் கவனம் செலுத்த வற்புறுத்தியதிலிருந்து, ரவீந்திர ஜடேஜாவின் சர்வதேச பேட்டிங் செயல்பாடும் அதிகரித்தது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக அவர் உருவெடுத்திருக்கிறார்.

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் காயமடைந்துள்ள ஜடேஜா, மேற்கொண்டு இங்கிலாந்து தொடரில் விளையாட முடியாமல் தற்பொழுது என்சிஏவில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங் ஜடேஜா தன்னுடைய மகன் மற்றும் மருமகள் மீது நிறைய புகார்களை முன்வைத்து நீண்ட பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

- Advertisement -

அந்த பேட்டியில் தன்னுடைய மருமகள் ரிவாபா தன்னுடைய குடும்பத்தை பிரித்து விட்டதாகவும், ஜடேஜாவை மட்டும் இல்லாமல் தன்னுடைய பேத்தியையும் பார்த்து ஐந்து வருடங்கள் ஆகிறது என்றும், ஜடேஜாவின் பணத்திற்காக தன்னுடைய மருமகள் குடும்பம் இப்படி நடந்து கொள்கிறது என்றும் கூறியிருந்தார்.

ரவீந்திர ஜடேஜாவின் தந்தையின் அந்த பேட்டியில் பதிந்திருந்த விஷயங்கள் மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது. இதன் காரணமாக இது கிரிக்கெட் உலகம் தாண்டி இந்திய பொது சமூகத்திலும் தற்பொழுது முக்கிய பேச்சாக மாறியிருக்கிறது. அதே சமயத்தில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி அரசியலில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது தன் தந்தையின் கருத்தை மறுத்து பேசி உள்ள ரவீந்திர ஜடேஜா அறிக்கையில் கூறும் பொழுது “சமீபத்தில் திவ்யா பாஸ்கர் வெளியிட்ட முட்டாள்தனமான பேட்டியில் கூறப்பட்ட எல்லாமே பொய்யானது. உண்மைக்கு புறம்பானவை ; இது ஒருதலைப் பட்சமானது. இதை முழுவதுமாக நான் மறுத்து நிராகரிக்கிறேன்.

இதையும் படிங்க : “சவால் விடறேன்.. சொந்த நாட்ல டி20 உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் வெல்லும்” – டேரன் சமி பேட்டி

என்னுடைய மனைவியின் இமேஜை கெடுப்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டு இருக்கிறது.இதை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். நானும் இதில் சொல்வதற்கு பல விஷயங்கள் இருக்கிறது. நான் அதை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது” என்று கூறியிருக்கிறார்.