அகர்கர் இந்த பையனுக்கு டி20 உலக கோப்பைக்கு பிளைட் டிக்கெட் போடுங்க.. இவன் ஸ்பெஷல் பேட்ஸ்மேன் – மைக்கேல் வாகன் கோரிக்கை

0
901
Agarkar

தற்பொழுது ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், இந்த மாதம் ஏப்ரல் கடைசி வாரத்தில், அடுத்து நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மே ஒன்றாம் தேதி உலகக் கோப்பையில் விளையாடும் எல்லா அணிகளும் தங்களின் முதல் அணியை தர வேண்டும். பிறகு மே 26 ஆம் தேதி வரையில் அதில் ஏதாவது மாற்றம் தேவைப்பட்டால் செய்து கொள்ளலாம்.

இந்த நிலையில் அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக்குழு டி20 உலகக்கோப்பை இந்திய அணியை இறுதி செய்வதில் தற்பொழுது பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சில புதிய வீரர்களை இணைக்கலாமா என்கின்ற ஆலோசனையும் நிச்சயம் சென்று கொண்டிருக்கும்.

- Advertisement -

தற்பொழுது வேகப்பந்து வீச்சில் மயங்கி யாதவ் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறார். இதைவிட மிக முக்கியமாக ரிஷப் பண்ட் கடந்த இரண்டு போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்திருக்கிறார். ஏனென்றால் தற்போது விக்கெட் கீப்பர்களாக யாரை அழைத்துச் செல்வது என்பதுதான் பெரிய குழப்பமாக இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு இருந்து வருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்தின் மைக்கேல் வாகன் “ரிஷப் பண்ட் எவ்வளவு சிறப்பாக விளையாடுகிறார் என்பதுதான் முக்கியமானது. அவர் விக்கெட்டுகளுக்கு இடையே மிக வேகமாக ஓடவில்லை. ஆனால் அதே சமயத்தில் அவர் பேட்டிங் முறை சிறப்பாக இருக்கிறது. டெல்லி அணிக்கு மட்டும் இல்லாமல் இந்திய அணிக்கும் அவர் சிறப்பான ஒரு அடையாளம். அவருக்கு இயற்கையாகவே கிரிக்கெட் விளையாடும் திறன் இருக்கிறது. அவர் எப்பொழுது பேட்டிங் செய்தாலும் எங்கே பவுண்டரி அடிக்க முடியும் என்று பார்க்கிறார்.

ரிஷப் பண்ட் தான் சந்தித்த மிட்சல் ஸ்டார்க்கின் முதல் பந்தை பிளிக் செய்கிறார் அது நேராக ஸ்டாண்டில் போய் விழுகிறது. கிரிக்கெட் வரலாற்றில் சில வீரர்களால் மட்டுமே எடுத்ததும் அப்படி விளையாட முடியும். அவர் அணி தோல்வி அடைந்ததற்கு அவர் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால் ஒரு பேட்ஸ்மேன் ஆக இந்திய அணிக்கு அவர் எப்படி விளையாடுவார்? என்பது மிகவும் சிறப்பானது.

- Advertisement -

இதையும் படிங்க : நான் நேற்று அதிரடியா விளையாடறதுக்கான காரணமே வேற.. கம்பீர் தந்த அந்த வாய்ப்புக்கு நன்றி – ரசல் பேட்டி

அவர் தற்போது இருக்கும் நிலையில் நல்ல முறையில் விளையாட முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒன்றரை வருடங்களாக விளையாடவில்லை. ஆனாலும் தற்பொழுது அவரை அது பெரிதாக பாதித்ததாக தெரியவில்லை. டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் அவருக்கான விமான டிக்கெட், ஹோட்டல் போர்டிங் பாஸ் எதுவும் புக் செய்யவில்லை என்றால், அஜித் அகர்கர் உடனடியாக புக் செய்ய வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.