டி20 கிரிக்கெட்டில் ஓய்வு.. 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவாரா ரோஹித்.? அவரே அறிவித்த சூசக பதில்

0
1296

டி20 உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இருக்கும் இந்திய அணி இன்று மும்பை கடற்கரையிலும் வான்கடே மைதானத்திலும் ரசிகர்களோடு கொண்டாட இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் 2027ம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவாரா? என்ற கேள்விக்கு அவரே சூசகமான பதில் ஒன்றை அளித்திருக்கிறார்.

- Advertisement -

2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. அதற்குப் பின்னர் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில அதிரடியான மாற்றங்களைசெய்தார். அதாவது தொடக்கம் முதலே அதிரடியாக ஆடுவது என்ற முடிவை கையில் எடுத்தார். அது டி20 கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல ஒரு நாள் போட்டியிலும் அதே பாணியில் தொடர்ந்து விளையாடினார்.

விளைவு, இந்திய அணிக்காக இவர் சில குறுகிய ஓவர்களே நின்றாலும் அணிக்கு சரியான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்தார். இது பின்னால் வரும் வீரர்கள் ஆட்டத்தை எளிதாக எடுத்துச் செல்ல உதவிகரமாக அமைந்தது. இந்த சூழ்நிலையில் 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையிலும் இதே ஆட்டமுறையைக் கையில் எடுத்த ரோகித் சர்மா இறுதிப்போட்டி வரை அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று தோல்வியே பெறாத கேப்டன் என்ற சாதனையையும் படைத்தார்.

- Advertisement -

ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் எதிர்பாராத தோல்வியை சந்தித்து நூலிழையில் உலகக் கோப்பை தவற விட்டார். இருப்பினும் தற்போது டி20 உலக கோப்பையை வென்று அந்த காயத்திற்கு சிறிது ஆறுதல் தேடிக் கொண்டாலும், ஒரு நாள் உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா ஒரு நாள் உலக கோப்பை வெல்வது மட்டுமல்ல பெஸ்ட் சாம்பியன்ஷிப்பும் எனது குறிக்கோளாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து ரோகித் சர்மா விரிவாக கூறும் பொழுது “கடந்த ஆண்டுகளை விட நான் இன்னும் சிறப்பான முறையில் பேட்டிங் செய்து வருகிறேன். அதனால் கிரிக்கெட்டில் இன்னும் சில ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன். இதில் 50 ஓவர் உலகக் கோப்பை வெல்வது எனது முக்கிய குறிக்கோள். அது மட்டுமல்லாமல் 2025ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெறுவதும் எங்கள் நோக்கமாக இருக்கிறது. இதற்கும் நாங்கள் தகுதி பெறுவோம் என்று நம்புகிறோம்” என்று ரோஹித் சர்மா கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:கோலிய பத்தி அந்த விஷயத்தை 10 முறை என்கிட்ட கேட்டாங்க.. நான் ஒரே பதில்தான் சொன்னேன் – ரிக்கி பாண்டிங் பேட்டி

இதன் மூலம் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பையில் பங்கேற்பது உறுதி என்று அவரே கிட்டத்தட்ட சூசகமாக அறிவித்திருக்கிறார். அதற்கு முன்னர் இன்று காலை டெல்லி வந்து இறங்கிய இந்திய அணி பிரதமர் நரேந்திர மோடியுடன் காலை உணவை முடித்துவிட்டு, உலகக் கோப்பை கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ளது.

- Advertisement -