ஜோ ரூட் நீங்க எங்க ஆள்.. ஆனா பும்ராகிட்ட என்ன பண்ண முடிஞ்சது?.. ரெடியா இருங்க வராரு – மைக்கேல் வாகன் பேச்சு

0
72
Bumrah

இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உள்நாட்டில் இலங்கை அணிக்கு எதிராக மூன்றாவது போட்டியில் தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியின் காரணமாக இங்கிலாந்து அணிக்கு மைக்கேல் வாகன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்த தொடரில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் ஒரு அரைசதம் மற்றும் இரண்டு சதங்கள் ஜோ ரூட் அடித்தார். எனவே இந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் எந்தவித சிரமமும் இல்லாமல் இங்கிலாந்து அணியால் எளிதாக வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்ற முடிந்தது.

- Advertisement -

ஜோ ரூட் அச்சாணி

அதே சமயத்தில் ஜோ ரூட் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 13 மற்றும் 12 ரன்கள் என சீக்கிரத்தில் வெளியேறினார். இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் லீடிங் எடுத்திருந்த போதும் கூட இங்கிலாந்து அணியால் வெல்ல முடியவில்லை. குறிப்பாக இங்கிலாந்து அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி இடம் படுதோல்வி அடைந்தது.

இதன் காரணமாக ஜோ ரூட் பேட்டிங் சரியாக அமையவில்லை என்றால் இங்கிலாந்து எவ்வளவு தடுமாறுகிறது? என்றும், அவர் இங்கிலாந்து அணிக்கு எவ்வளவு முக்கியமான வீரராக இருக்கிறார்? என்றும் மைக்கேல் வாகன் குறிப்பிட்டிருக்கிறார். அத்தோடு பும்ரா மற்றும் கம்மின்ஸ் ஜோ ரூட்டுக்கு எப்படியான சவால் கொடுக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

பும்ரா ரூட் அவுட்புட்டை குறைப்பார்

இதுகுறித்து பேசி இருக்கும் மைக்கேல் வாகன் கூறும் பொழுது ” ஜோ ரூட்டுக்கு எதிராக பந்து வீசுவதை பும்ரா ரசித்து செய்கிறார். அடுத்த கோடையில் இந்தியா இங்கு வரும்பொழுது ஜோ ரூட் அவுட்புட்டை பும்ரா குறைத்து விடுவார். மேலும் ஆஸ்திரேலியாவில் கம்மின்ஸ் ஜோ ரூட்டுக்கு எதிராக இதையே செய்வார். மேலும் ஜோ ரூட் ஆஸ்திரேலியா மண்ணில் சதம் அடித்ததும் இல்லை.எனவே ஜோ ரூட் நன்றாக விளையாடாத பொழுது இங்கிலாந்து வெற்றி பெற வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால் கடினம்.

இதையும் படிங்க : 12 மாசங்களுக்கு முன்ன ரிஷப் பண்ட் வாக்கு கொடுத்தார்.. தோனியை விட சிறப்பான பையன் – ரிக்கி பாண்டிங் பேச்சு

இங்கிலாந்து டெஸ்ட் பேட்டிங் யூனிட்டுக்கு ஜோ ரூட் எவ்வளவு முக்கியமானவர் என்பதை இந்த வாரம் எனக்கு உணர்த்தியது. இந்த அற்புதமான வீரர்கள் ஜோ ரூட்டை சுற்றி விளையாடி அரைசதங்கள் அடித்தார்கள். அதே சமயத்தில் நான்காவது இடத்தில் வரும் ஜோ ரூட் பெரிய ரன்கள் எடுக்க வேண்டும். அப்படி அவர் எடுக்காவிட்டால் இங்கிலாந்து அணி வெல்லாது. ஆனால் எல்லா வாரமும் ஜோ ரூட் ரன்கள் அடிக்க முடியாது. இந்த வாரம் அதை காட்டியது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -