இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தோல்வி அடைந்தது குறித்து மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்று இந்த போட்டியில் மூன்றாவது நாளில் இந்திய அணி மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 30 ரன்கள் வித்தியாசம் தென் ஆப்பிரிக்க அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. தற்போது இது பரவலாக விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.
ஆடுகளம் பற்றி கம்பீர்
இந்த போட்டி நடைபெற்ற ஆடுகளம் குறித்து வெளியில் மைக்கேல் வாகன், டேல் ஸ்டெய்ன், மற்றும் இந்திய முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே ஆகியோர் விமர்சனத்தை முன் வைத்திருந்தார்கள். ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே இந்த ஆடுகளத்தில் விளையாட முடியும் என்று கூறினார்.
இந்த போட்டியில் தோல்வி அடைந்த பிறகு இந்திய பயிற்சியாளர் கம்பீர் தாங்கள் விரும்பி கேட்டபடிதான் ஆடுகளம் கொடுக்கப்பட்டது என்றும், இதில் ஆடுகளத்தை தயாரிப்பாளர் மேல் தவறு எதுவும் இல்லை என்றும் கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட சுழல் பந்து வீச்சுக்கு அதிக சாதகத்தை கொடுக்கக்கூடிய ஆடுகளத்தை வாங்கியது மேலும் விமர்சனத்தை அதிகமாக இருக்கிறது.
இந்திய அணி தோல்விக்கு தகுதியானது
தற்போது கம்பீர் இந்திய வீரர்கள் இப்படியான ஆடுகளத்தில் எப்படி விளையாடுகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக நாங்கள் சுழல் பந்து வைத்து சாதகமான ஆடுகளத்தை வாங்கினோம் என்று கூறினார். இதன் காரணமாக தற்பொழுது முன்னாள் வீரர்கள் இன்னும் கடுமையான முறையில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இதையும் படிங்க : 211 ரன்.. தங்க வைத்து இலங்கையை செஞ்சி விட்ட பாகிஸ்தான் அணி.. ஒயிட் வாஸ் பரிதாபம்.. மூன்றாவது ஒருநாள் போட்டி
இதுகுறித்து மைக்கேல் வாகன் எழுதும்போது “இப்படிப்பட்ட ஒரு ஆடுகளத்தை உருவாக்கியதற்காக, உலக சாம்பியனிடம் இந்திய அணி தோல்வி அடைவதற்கு தகுதியான அணி. மிகவும் புத்திசாலித்தனமான தென் ஆப்பிரிக்காவின் வெற்றி இது” என்று இந்திய அணி நிர்வாகத்தை விமர்சித்தும் தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகத்தை பாராட்டியும் கூறி இருக்கிறார்.






