211 ரன்.. தங்க வைத்து இலங்கையை செஞ்சி விட்ட பாகிஸ்தான் அணி.. ஒயிட் வாஸ் பரிதாபம்.. மூன்றாவது ஒருநாள் போட்டி

0
14
Rizwan

நேற்று பாகிஸ்தான் அணி தங்களது சொந்த மண்ணில் இலங்கை அணி எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

தற்போது பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே இலங்கை அணி தோல்வி அடைந்திருந்தது. இந்த நிலையில் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது.

- Advertisement -

மீண்டும் சரிந்து விழுந்த இலங்கை அணி

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஷாங்கா 27 பந்தில் 24 ரன், கமில் மிஸ்ரா 30 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார்கள்.

இதற்கு அடுத்து வந்த இலங்கை பேட்ஸ்மேன்களில் குசால் மெண்டிஸ் 54 பந்தில் 34 ரன், சமரவிக்கிரமா 65 பந்தில் 48 ரன், பவன் ரத்னாயகே 37 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் இலங்கை அணி 45.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் பந்துவீச்சில் வாசிம் ஜூனியர் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

பாகிஸ்தான் அபார வெற்றி

இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு பகார் ஜமான் 45 பந்தில் 55 ரன்கள், பாபர் அசாம் 52 பந்தில் 34 ரன், முகமது ரிஸ்வான் 92 பந்தில் 61* ரன், உசைன் தலாத் 57 பந்தில் 42* ரன் எடுத்தார்கள். பாகிஸ்தான் அணி 44.4 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் இலங்கை அணி இந்த ஒருநாள் தொடரில் ஒயிட் வாஸ் ஆனது.

இதையும் படிங்க : 79/1 டு 136/10.. சூரியவன்சியின் அதிரடி வீண்.. இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி.. நட்சத்திர வீரர்கள் ஏமாற்றம்

இந்த சுற்றுப்பயணத்தில் முதல் போட்டி முடிவடைந்ததும் பாதுகாப்பு காரணமாக இலங்கை வீரர்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி வர முயற்சி செய்தார்கள். ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் கடுமையான உத்தரவு பிறப்பித்ததால் தங்கி விளையாடினார்கள். இந்த நிலையில் இறுதியாக தொடரை முழுமையாக தோற்று இருக்கிறார்கள்.

- Advertisement -