சச்சினுக்கு ஆதரவா?.. பீட்டர்சன் முட்டாள்தனமா பேசறார்.. அதை ஏத்துக்கலாம் முடியாது – மைக்கேல் வாகன் விமர்சனம்

0
53
Vaughan

தற்போதைய கிரிக்கெட் உலகில் விளையாடி வரும் பந்துவீச்சாளர்கள் குறித்து கெவின் பீட்டர்சன் கூறியிருந்த கருத்துக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் தற்போது சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் தற்போது விளையாடி வரும் இங்கிலாந்தின் ஜோ ரூட் இருக்கிறார். இந்த நிலையில் கடந்த காலத்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது என கெவின் பீட்டர்சன் சர்ச்சைக்குரிய முறையில் பேசி இருந்தார்.

- Advertisement -

கெவின் பீட்டர்சன் கருத்து

கடந்த காலத்தில் பேட்டிங் செய்வது தற்போதைய காலத்தை விட இரண்டு மடங்கு கடினமாக இருந்தது எனவும், இப்போது இருக்கும் பந்துவீச்சாளர்களை விட அப்போது சிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள் எனவும், தன்னால் அப்படி ஒரு இருபது பந்துவீச்சாளர்களை பட்டியலிட முடியும் எனவும் கெவின் பீட்டர்சன் கூறியிருந்தார்.

இது சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த சாதனையை ரூட் முறியடித்தாலும் கூட, சச்சின் விளையாடிய காலகட்டமே மிகவும் கடினமானது என்று கெவின் பீட்டர்சன் கூறுவதாக அர்த்தம் ஆகியது. தற்பொழுது இதற்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் எதிர்ப்பு தெரிவித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

மைக்கேல் வாகன் எதிர்ப்பு

இது குறித்து மைக்கேல் வாகன் பேசும்பொழுது “கெவின் பீட்டர்சன் முட்டாள்தனமாக பேசுகிறார் என்று நினைக்கிறேன். கடந்த ஆறு அல்லது ஏழு வருட உலக கிரிக்கெட்டை நான் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இந்திய கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் கூட முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் வந்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவை எடுத்துக் கொண்டால் தற்போது இருக்கும் மூவர் குழு எப்போதும் போல சிறந்ததாகவே இருக்கிறது”

இதையும் படிங்க : 60 பந்து 120 ரன்.. புரட்டி எடுத்த டிவிலியர்ஸ்.. பாகிஸ்தான் படுதோல்வி.. தெ.ஆ பைனலில் சாம்பியன்

“நீங்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றால் அங்கு ராபாடா மற்றும் ஜான்சன் இருக்கிறார்கள். அதே சமயத்தில் நீங்கள் நியூசிலாந்தை பார்த்தால் சமீபம் வரையில் போல்ட் மற்றும் சவுதி என சிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்திருக்கிறார்கள். தற்போதைய பேட்ஸ்மேன்கள் மிகவும் அதிரடியான முறையில் விளையாடுகிறார்கள். ஒருவேளை இதெல்லாம் கெவின் பீட்டர்சன் காலத்தில் இல்லாமல் இருக்கலாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -