60 பந்து 120 ரன்.. புரட்டி எடுத்த டிவிலியர்ஸ்.. பாகிஸ்தான் படுதோல்வி.. தெ.ஆ பைனலில் சாம்பியன்

0
237
Devilliers

இங்கிலாந்தில் நடந்து வந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் லெஜன்ட்ஸ் தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பட்டத்தை வென்றது.

இங்கிலாந்து பர்மிங்காம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற முகமது ஹபிஸ் தலைமையிலான பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

சர்ஜில் கான் அபாரம்

முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் சர்ஜில் கான் 44 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். கேப்டன் முகமது ஹபிஸ் 10 பந்தில் 17 ரன்கள் எடுக்க, இன்னொரு மூத்த வீரர் சோயப் மாலிக் மிக மெதுவாக விளையாடி 25 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதற்கு அடுத்து இறுதிக் கட்டத்தில் உமர் அமீன் 19 பந்துகளில் 36 ரன்கள், ஆசிப் அலி 15 பந்தில் 28 ரன்கள் எடுத்தார்கள். இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் வில்ஜான் மற்றும் பர்னல் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

ஏபி டிவில்லியர்ஸ் சூறாவளி பேட்டிங்

இதைத் தொடர்ந்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஒரு துவக்க ஆட்டக்கார ஆம்லா 14 பந்தில் 18 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு முனையில் இன்னொரு துவக்க ஆட்டக்காரர் ஏபி டிவில்லியர்ஸ் பாகிஸ்தான் பந்துவீச்சை வழக்கம்போல் மைதானம் எங்கும் அடித்து நொறுக்கினார்.

இதையும் படிங்க : 1 பந்து 3 ரன்.. 8 ஆண்டுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ்க்கு வெளிச்சம்.. பாகிஸ்தான் அணிக்கு நடந்த பரிதாபம்

இந்த போட்டியில் மொத்தம் 60 பந்துகளை சந்தித்த ஏபி டிவில்லியர்ஸ் ஆட்டம் இழக்காமல் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 120 ரன்கள் குவித்தார். இன்னொரு முனையில் அதிரடி காட்டிய ஜேக்கப் டுமினி ஆட்டம் இழக்காமல் இருபத்தி எட்டு பந்தில் 50 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் அணி 16.5 ஓவரில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -