“வார்னர் இடத்தில் இவர்தான் விளையாடனும்.. 400 ரன் கட்டாயம் அடிப்பார்” – மைக்கேல் கிளார்க் உறுதி!

0
2704

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அந்த அணியில் மிகப்பெரிய குழப்பம் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. டேவிட் வார்னர் இருந்தவரை அவர் தொடக்க வீரராக தன்னுடைய பணியை சிறப்பாக செய்தார்.

இந்த நிலையில் டேவிட் வார்னர் ஓய்வுக்கு பிறகு ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக யார் வரப் போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட்டில் மார்க்கஸ் ஹாரிஸ்,கேமரான் பான்கிராப்ட், மேட் ரீன்ஷா, வில் புகோஸ்கி போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் வாட்சன் புது ஐடியா ஒன்றை கொடுத்திருந்தார்.

- Advertisement -

அதில் ஆஸ்திரேலியா அணியின் அனுபவ வீரரான ஸ்மித்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் வாட்சனின் இந்த கருத்துக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ஸ்மித் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக அணி நிர்வாகம் அதற்கு அனுமதி வழங்க வேண்டும். ஸ்மித் தொடக்க வீராக வந்தால் அணியில் மாற்றம் எளிதில் முடிந்து விடும்.

என்னைக் கேட்டால் கேமரான் கிரீனுடன் கிரீன் தொடக்க வீரராக டேவிட் வானர் இடத்தில் களமிறங்குவார் என நினைக்கிறேன். ஆனால் ஸ்மித் தொடக்க வீரராக வரவேண்டும் என்று நினைத்தால் அவர் இடத்தில் கேமரான் கிரீன் விளையாடக்கூடும். இல்லையென்றால் கேமரான் கிரீன் நம்பர் ஆறாவது இடத்திலும் விளையாட சரியான தேர்வாக இருப்பார்.

- Advertisement -

ஸ்மித் ஒரு நல்ல வீரர். தமக்கு சவாலான ஒரு காரியம் வேண்டும் என அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் மட்டும் தொடக்க வீரராக களம் இறங்கினால் 12 மாதத்தில் சிறந்த ஒரு தொடக்க வீரர் என்ற பெயரை அவர் பெறுவார். பிரைன் லாராவின் 400 ரன்கள் ரெக்கார்டை அவர் முறியடித்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

ஏனென்றால் ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தி விளையாடும் திறமை அவருக்கு இருக்கிறது என்று கிளார்க் கூறியுள்ளார். இதுகுறித்து ஸ்மித்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர் நான் தொடக்க வீரராக களம் இறங்கினால் நிச்சயம் மகிழ்ச்சி தான். இந்தத் தொடர் முடிந்தவுடன் தேர்வுக்குழு உறுப்பினரும் எங்கள் அணி கேப்டன் பேட் கம்மின்சும் யாரை தொடக்க வீரராக களம் இறக்கலாம் என்பது குறித்து பேசுவார்கள்.

நிச்சயமாக அந்த பொறுப்புக்கு நான் விருப்பம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். தற்போது ஆஸ்திரேலிய அணி வரும் 17ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் தங்களது சொந்த மண்ணில் விளையாடுகிறது குறிப்பிடத்தக்கது.