நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியில் எந்த வீரர் ஆட்டநாயகன் விருது வாங்குவார்? என்பது குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேசியிருக்கிறார்.
இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை மறுநாள் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் இறுதி போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் நடப்பு தொடரில் இரு அணிகளும் மோதிக் கொள்வது இதுவே முதல் முறை.
நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் பும்ரா மிகப்பெரிய காரணியாக இருந்தார். அவர் கடைசியில் வீசிய இரண்டு ஓவர்கள் இந்திய அணியை போட்டி கொண்டு வந்து வெற்றி பெற வைத்தது.
இதுகுறித்து மைக்கேல் கிளார்க் பேசும் பொழுது “பும்ராவிடம் பல வேரியேஷன்கள் இருக்கிறது. ஆனாலும் அவற்றை அழுத்தமான நேரத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அவர் தெரிந்து இருப்பதுதான் மிகப்பெரிய திறமை. அதுவே அவரை உலகில் சிறந்தவராக மாற்றுகிறது. மேலும் இறுதிப்போட்டியில் அவர் ஆட்டநாயகனாக வந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்”
“ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பவர் எல்லா சூழ்நிலைகளிலும் ரன்கள் எடுப்பவர் என்று சொல்வார்கள். நீங்கள் பும்ராவை எடுத்துக் கொண்டால் அவர் உலகில் பல சூழ்நிலைகளிலும் மிகச் சிறப்பாக பந்துவீச்சை செய்து வந்திருக்கிறார். நான் அவருக்கு கேப்டனாக இருந்தாலும் அவரை எந்த இடத்தில் பயன்படுத்துவது என்பது பெரிய சவாலாக இருக்கும். நிச்சயமாக கடைசியில் இரண்டு ஓவர்களுக்கு அவர் தேவையாக இருப்பார்”
இதையும் படிங்க : என்னை பத்தி பேசி விளம்பரம் தேடாதீங்க கைப்.. விராட் ரோஹித் திறந்து இருந்தா கதையே வேற – அமீர் விமர்சனம்
“இந்த தொடரில் இந்தியாதான் மிகவும் அருமையாக விளையாடி வந்திருக்கிறது. ஆனால் இந்த உலகக் கோப்பை பயணத்தில் நாம் பும்ரா பற்றி அதிகம் பேசவில்லை. ஏனென்றால் இதையெல்லாம் அவர் சாதாரணமாக செய்யக்கூடியவர் என்று நினைக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.