இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் தன் குறித்து பேசி விளம்பரம் தேட வேண்டாம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் விமர்சனம் செய்திருக்கிறார்.
நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லாது என தொடர்ந்து முகமது அமீர் கூறி வருகிறார். மேலும் அபிஷேக் ஷர்மா பேட்டிங் குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார். இதன் காரணமாக இந்தியாவில் இவர் குறித்த விமர்சனங்கள் நிறைய கிளம்பி உள்ளது.
கைப் விமர்சனம்
முகமது அமீரின் இத்தகைய பேச்சுக்களுக்கு பதில் கொடுத்து இருந்த முகமது கைப் அமீருக்கு இந்திய அணி செமி பைனலுக்கு வரும் என நன்றாகவே தெரியும் என்றும், ஆனால் அவர் இந்தியாவை பேசுவதின் மூலமாக விளம்பரத்தை தேடிக்கொள்வதற்காக இப்படியான கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் எந்த நாளிலும் இந்திய கிரிக்கெட்டில் திறமைக்கு ஈடாக வர முடியாது எனவும், மேலும் பாகிஸ்தான் தரப்பிலிருந்து நாம் பதில் கொடுக்க வேண்டும் என்று தான் இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள், எனவே நாம் இவர்களை கண்டு கொள்ளக்கூடாது என கடுமையான முறையில் விமர்சனம் செய்திருந்தார்.
முகமது அமீர் விளக்கம்
இது குறித்து முகமது அமீர் பேசும் பொழுது “முகமது கைப் வெறும் 29 டி20 போட்டிகள் விளையாடி இருக்கிறார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 103. அவர் பீல்டிங் நன்றாக செய்வார்கள் என்றுதான் அணியில் வைத்திருந்திருக்கிறார்கள். இதற்காக அவர் கங்குலிக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரராக அவர் இப்படி பேசுவது சரியானது கிடையாது”
இதையும் படிங்க : பும்ரா ஒரு அபூர்வ சக்தி.. சூர்யா விளக்கை தேய்ச்சா வந்து வேலையை செஞ்சு கொடுத்துடுவாரு – பாப் டு பிளேசிஸ் பாராட்டு
“இந்த இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருந்திருந்தால், நான் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று சொல்லி இருப்பேன். இப்போதுள்ள அணிக்கு அந்த திறமை கிடையாது என்பதால் நான் வெல்லாது என்று சொல்கிறேன். இதில் எங்கிருந்து நான் கவனம் பெறுவதற்காக பேசுகிறேன். பாகிஸ்தானில் கவனத்தைப் பெற வேண்டும் என்றுதான் முகமது கைப் ஏன் குறித்து இப்படி பேசுகிறார் என்று கூட நான் சொல்லவலாம்தானே” என்று கூறியிருக்கிறார்.






