ராகுலுக்காக நான் சண்டை போட்டு இருப்பேன்.. ஆஸி முன்னாள் கேப்டன் கிளார்க் கருத்து

0
112

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் அதிரடியாக நீக்கப்பட்டார். கடந்த 10 இன்னிங்ஸில் அவர் ஒரு முறை கூட 25 ரன்ளை தாண்டவில்லை. இதன் காரணமாக இந்திய அணி அவரை அதிரடியாக அணியிலிருந்து நீக்கியது.

- Advertisement -

தற்போது இந்திய அணி சுப்மன் கில்லுக்கு  தொடக்க வீரராக விளையாட வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், நான் கே எல் ராகுலை மிகவும் ரசிக்கிறேன். அவர் ஒரு இளம் வீரர். பல திறமைகளை பரிசாக கொண்டவர். இந்தியா தற்போது அனைத்து போட்டிகளிலும் வென்று வருகிறது.

நான் மட்டும் கேப்டன் ஆக இருந்திருந்தால் கே எல் ராகுலுக்காக சண்டை போட்டு இருப்பேன். நாம் அனைத்து போட்டிகளையும் வென்று கொண்டிருக்கும் நிலையில் எதற்காக அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என நான் கேட்டிருப்பேன்.

கே எல் ராகுல் தற்போது அவருடைய சிறந்த தருணத்தில் இல்லை. ஆனால் அவரை நாம் அணியில் வைத்திருப்பதால் எந்த தவறும் இருந்திருக்காது. கே எல் ராகுல் ஒரு நல்ல வீரர். அவர் கடுமையாக பயிற்சி செய்து வருகிறார். நிச்சயமாக அவர் பார்ம்க்கு திரும்பி பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்.
நாம் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் போது சரியாக விளையாடாத வீரர்களை ஊக்கம் அளித்து அதிக போட்டிகளில் வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

- Advertisement -

கேஎல் ராகுலுக்காக நான் நிச்சயம் வருத்தப்படுகிறேன். ஏனென்றால் ந அவர் டெல்லி டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழந்த விதம் நிச்சயம் துரதிஷ்டவசமானது. மழை பெய்யும் போது வெளுத்து வாங்கும் என்று சொல்வார்கள். அது போல் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கும் போது எத்தனை பில்டர்கள் இருந்தாலும் நீங்கள் அடிக்கும் பந்து எல்லாம் பவுண்டரிக்கு செல்லும்.

இதுவே நீங்கள் பார்ம்  இல்லை என்றால் உங்களைச் சுற்றி 20 பில்டர்கள் நிற்பது போல் தெரியும். உங்களுடைய சிறந்த வீரர் எவ்வளவு நெருக்கடியான கட்டத்திலும் வழியை கண்டுபிடித்து மீண்டும் ரன்கள் சேர்ப்பார். இந்தியா ராகுல் அப்படிப்பட்ட ஒரு வீரர் என்று நினைத்தால் இருந்தால் நிச்சயம் அவர் மீது நீங்கள் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.

ராகுல் மனதளவில் உத்வேகம் என்று இருந்திருக்கலாம். இது போன்ற சமயங்களில் உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. நாம் பேட்டில் பந்து பட்டு விக்கெட் கீப்பர் பிடித்து விடுவார். ஆனால் அதுவே கொஞ்சம் தள்ளி சென்றால் பந்து பௌண்டரிக்கு செல்லும். இப்படிப்பட்ட அதிர்ஷ்டம் ராகுலுக்கு தேவை என்று மைக்கேல் கிளாக் கூறியுள்ளார்.