நல்லவேளை பாபர் அசாம் அவுட்.. அது அவரோட டீமுக்கே நல்லதுதான் – மைக்கேல் கிளார்க் விமர்சனம்

0
26
Babar

தற்போது உலக கிரிக்கெட்டில் சீரான ரன்கள் குவிப்பதில் விராட் கோலிக்கு அடுத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் இருந்து வருகிறார். சென்ற ஆண்டுகளில் அவரை அடுத்த விராட் கோலி என்கிற அளவுக்கான பேச்சுகள் சென்று கொண்டிருந்தன. விராட் கோலி மீண்டும் பேட்டிங் ஃபார்முக்கு திரும்பிய பிறகு அப்படியான பேச்சுக்கள் நின்று இருக்கின்றன.

மேலும் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கு முன்பாக அவராக விலகிக் கொண்டார்.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, பாகிஸ்தான் அணியின் இயக்குனராக முகமது ஹபிஸ் கொண்டுவரப்பட்டார். இவர் மிகவும் கடினப்பட்டு பேசி பாபர் அசாமை டி20 கிரிக்கெட்டில் துவக்க வீரர்கள் இடத்தில் இருந்து மூன்றாவது வீரராக கொண்டு வந்தார். ஆனால் இந்த முடிவில் தனக்கு உடன்பாடு இல்லை என்று சமீபத்தில் பாபர் அசாம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது பாகிஸ்தானில் பிஎஸ்எல் டி20 லீக் நடைபெற்று வருகிறது. கராச்சி கிங்ஸ் அணியிலிருந்து விலகிய பாபர் அசாம் தற்பொழுது பெசாவர் சல்மி அணியில் கேப்டன் பொறுப்பில் விளையாடுகிறார். இந்த நிலையில் இந்தத் தொடரில் கராச்சி மைதானத்தில் நடைபெற்ற தகுதி சுற்றுப் போட்டியில் முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பெசாவர் சர்மி அணியும் மோதின.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெசாவர் சல்மி அணி கராச்சி ஆடுகளத்திற்கு ஏற்ற வகையில் அதிரடியாக விளையாடாமல் மிகவும் மந்தமான முறையில் விளையாடும் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதற்கு அடுத்து இந்த இலக்கை நோக்கி விளையாடிய முல்தான் சுல்தான் அணி மிகவும் வசதியாக மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 18.3 ஓவர்களில் 9 பந்துகளை மீதம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பெஷாவர் சல்மி அணியின் கேப்டன் பாபர் அசாம் 42 பந்துகளில் 46 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது கராச்சி மைதான ஆடுகளத்திற்கு சரியான பேட்டிங் அணுகுமுறை கிடையாது. இவரது மந்தமான ஆட்டம் மற்ற பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தத்தை உண்டாக்க அவர்கள் வரிசையாக ஆட்டம் இழந்தார்கள். எனவே அவரது மெதுவான ஆட்டம் பற்றி நிறைய விமர்சனங்கள் எழுந்தது. மேலும் சர்வதேச டி20 மற்றும் டி20 லீக்குகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 129 மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 20 வருடங்கள் பின் முத்தரப்பு தொடர் நடத்தும் பாகிஸ்தான்.. 2 பெரிய கிரிக்கெட் நாடுகள் சம்மதம்

இந்த போட்டிக்கு கிரிக்கெட் வர்ணனை செய்த ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பாபர் அசாம் அவுட் ஆனதும் பேசிய பொழுது “பாபர் அசாம் அவுட் ஆனது நல்லதென்று அரிதாகவே நினைக்க முடியும். ஏனென்றால் அவர் ஒரு கிளாசிக் பேட்ஸ்மேன் மேலும் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். ஆனால் இந்த மைதானத்தில் பௌண்டரி எல்லைகள் மிகவும் சிறியதாக இருக்கிறது. இங்கு குறைந்தது 170 ரன்கள் ஆவது எடுக்க வேண்டும். இப்படியான நிலையில் பாபர் அசாம் மிகவும் மெதுவாக விளையாடுவதற்கு, அவர் அவுட் ஆனதே நல்லது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -