ரன் மழை பொழியும் ஹைதராபாத் மும்பை போட்டி.. யார்க்கர் நடராஜன் ஏன் விளையாடவில்லை.. வெளியான தகவல்

0
1037
Natarajan

இன்று ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் போட்டியில் ரன் மழை நிற்காமல் பெய்து வருகிறது.இந்த போட்டியில் நிறைய ஐபிஎல் சோதனை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதான ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமானதாக இருந்தது. இதன் காரணத்தால் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களை திணறடித்தார்கள்.

- Advertisement -

ஹைதராபாத் அணிக்கு மயங்க் அகர்வால் மட்டும் 13 பந்தில் 11 ரன்கள் என வெளியேறினார். இவருக்கு அடுத்து டிராவிஸ் ஹெட் 24 பந்தில் 62 ரன்கள், அபிஷேக் சர்மா 23 பந்தில் 63 ரன்கள், ஹென்றி கிளாசன் 34 பந்தில் 80* ரன்கள், எய்டன் மார்க்ரம் 28 பந்தில் 42* ரன்கள் என எல்லோரும் அதிரடியில் கலக்க, ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் தொடர் வரலாற்றில் 277 ரன்கள் மூன்று விக்கெட் இழப்புக்கு குவித்து, மிக அதிகபட்ச ரன்களை குவித்த அணியாக மாறியது.

மேலும் இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா பும்ராவை சரியான இடத்தில் பயன்படுத்தாமல், டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை ஏற்படுத்தி தரும் வரை, பும்ராவை கொண்டு வராமல் பெரிய தவறு செய்து விட்டார். இதன் காரணமாக ஹைதராபாத் அணி ஆரம்பத்திலேயே தேவையான ரன்களை எடுத்து விட்டது.

இதற்கு அடுத்து களம் இறங்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியும் தற்பொழுது ஹைதராபாத் அணிக்கு பயம் காட்டும் வகையில் ரண்களை குவித்து வருகிறது. இதன் காரணமாக பெரிய ரன்களை குவித்தும் ஹைதராபாத் அணி தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதால், ஹைதராபாத் அணியின் யார்க்கர் நடராஜன் இந்த போட்டியில் விளையாடவில்லை என்பது பின்னடைவாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 277/3.. புது ஐபிஎல் வரலாறு.. ஆர்சிபி ரெக்கார்டு காலி.. மும்பை அணியை விளாசிய ஹைதராபாத்

எனவே ரசிகர்கள் இப்படியான போட்டியில் அவர் ஏன் விளையாடாமல் இருக்கிறார்கள் என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவருக்கு சிறிய அளவில் காயம் இருக்கின்ற காரணத்தினால் இன்றைய போட்டியில் விளையாடவில்லை என்று ஹைதராபாத் அணி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தால் நடராஜன் இல்லாதது முக்கிய காரணமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.