பதிரானாவுக்கு மரியாதை எல்லாம் கொடுக்க முடியாது.. நாங்க மலிங்கா கூடவே ஆடியிருக்கோம்.. இஷான் கிஷன் அடாவடி பேச்சு

0
70794

ஐபிஎல் தொடரில் இன்று மிகப்பெரிய ஆட்டமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணியை கடைசியாக சிஎஸ்கே 13 ஆண்டுகளுக்கு முன்பு தோற்கடித்தது.

அதன் பிறகு தொடர்ந்து மும்பை அணி தான் வெற்றி பெற்றது. ஆனால் ஹர்திக் பாண்டியா, பொலார்ட் ஆகியோர் இல்லாமல் மும்பையில் முதல் முறையாக சிஎஸ்கேவை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது. இந்த நிலையில் மலிங்காவை போல் பந்து வீசும் பதிரானா மும்பைக்கு கடும் நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மும்பை அணியின் தொடக்க வீரர் இசான் கிஷன், தற்போது தொழில்நுட்பம் முன்னேற்றம் காரணமாக எந்த ஒரு பந்துவீச்சாளர் குறித்தும் நிறைய வீடியோ எங்களுக்கு கிடைக்கிறது. இந்த வீடியோவை வைத்து பதிரானா புதிய பந்தில் எவ்வாறு பந்து வீசுகிறார் என்பது குறித்து பார்த்து தெரிந்து கொள்வோம்.

அதேசமயம் நாங்கள் ஒரே ஒரு பந்துவீச்சாளர் மீது மட்டும் கவனம் செலுத்த முடியாது. பதிரானா நன்றாக பந்து வீசுகிறார் என்பதற்காக அவருக்கு மரியாதை எல்லாம் கொடுக்க முடியாது. நேர்மறையான எண்ணங்களுடன் பதிரானா  பந்தை எதிர்கொள்ள வேண்டும். அவர் பந்தை யாக்கர் லெங்தில் இருந்து கொஞ்சம் மிஸ் செய்தால் அதனை அடித்து ஆட வேண்டும்.

மும்பை அணியில் மலிங்கா இருக்கும்போது நாங்கள் அவருடைய பந்துவீச்சை வலைப் பயிற்சியில் எதிர் கொண்டிருக்கிறோம். இதன் மூலம் எங்களுக்கு நல்ல உத்வேகம் கிடைத்திருக்கிறது. பந்தை பார்த்து எங்களுடைய ஆட்டத்தை வெளிக்கொண்டால் அவர் எப்படி பந்து வீசினாலும் எங்களால் ரன் சேர்க்க முடியும். பதிரானா பலம் என்ன என்பது குறித்து யோசிக்காமல் அவருடைய பந்தில் எப்படி ரன்கள் அடிப்பது என்பது குறித்து தான் யோசிப்போம்.

- Advertisement -

எங்களுடைய யுத்திகள் எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கும். இன்றைய ஆட்டத்தில் கூட எந்த பந்தை அடிக்க வேண்டுமோ அதனை கண்டிப்பாக அடித்து ரன் சேர்ப்போம். சென்னை அணியில் நிறைய சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியும். சென்னை ஆடுகளம் எப்படி செயல்படும் என்றும் எங்களுக்கு தெரியும். எனவே எந்த சூழலையும் எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.