9 போட்டிகளில் வெறும் 6 தோல்வி; லீக் சுற்றுடன் மொத்தமாக வெளியேறிய மும்பை கேப்டவுன் அணி!

0
1691

சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரிலிருந்து மும்பை கேப்டன் அணி வெளியேறியுள்ளது.

சவுத் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக டி20 லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று வரும் அணிகளின் உரிமையாளர்கள் சவுத் ஆப்பிரிக்கா லீக் தொடரிலும் அணிகளை வாங்கியுள்ளனர்.

- Advertisement -

ஜனவரி முதல் வாரத்தில் இருந்து நடைபெற்று வரும் இந்த லீக் சுற்றுகளில் மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர்கள் வாங்கியுள்ள மும்பை கேப்டவுன் அணி கடப்பாரை அணியாக பார்க்கப்பட்டது. ஏனெனில் அந்த அணியில் ரசித் கான், ஜோப்ரா ஆர்ச்சர், டிம் டேவிட், ரபாடா டெவால் பிரவீஸ் என அதிரடிப்பட்டாலங்கள் இருந்தது.

லீக் சுற்றை வெற்றியுடன் துவங்கிய கேப்டவுன், கடைசி வரை வெற்றியுடன் எடுத்துச் செல்ல முடியவில்லை. மொத்தம் ஒன்பது லீக் போட்டிகள் விளையாடி அதில் மூன்று வெற்றி மட்டுமே பெற்றிருக்கிறது.

6 போட்டிகளில் தோல்வியை தழுவி வெறும் 13 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. லீக் சுற்றில் கடைசி போட்டி 6ம் தேதி சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடக்கவுள்ளது.

- Advertisement -

இந்நிலையில், மீதம் ஒரு போட்டி மட்டுமே இருப்பதால், இனி மும்பை கேப்டவுன் அணியால் செமி பைனலுக்கு தகுதி பெற முடியாது என அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. இந்த புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் ஜோகன்னெஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் செமி பைனலுக்குள் சென்றுவிட்டனர் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.