இன்னும் எனக்கு கனவு மாதிரி இருக்கு… இன்னைக்கு நானும் ருத்துவும் போட்ட ஸ்கெட்ச் படி எல்லாம் நல்லா நடந்தது – ஆட்டநாயகன் டெவான் கான்வெ பேட்டி!

0
5322

“இன்று நானும் ருத்துவும், 15 ஓவர்களில் என்ன செய்ய வேண்டும் என்று பக்காவாக திட்டமிட்டு களமிறங்கினோம். அதன்படி நடந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது.” என ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசினார்.

2023 ஐபிஎல் சீசன் முழுவதும் சிஎஸ்கே அணிக்கு டாப் ஆர்டரில் தூணாக விளங்கி வந்தவர்கள் ருத்துராஜ் மற்றும் டெவான் கான்வெ இருவரும் தான். ருத்துராஜ் 15 இன்னிங்ஸ் விளையாடி 4 அரைசதங்கள் உட்பட 590 ரன்கள் அடித்தார். டெவான் கான்வெ 15 இனிங்ஸ்களில் 6 அரைசதங்கள் உட்பட 672 ரன்கள் அடித்தார்.

- Advertisement -

ருத்து மற்றும் கான்வெ இருவரும் தொடர் முழுவதும் இடைவிடாமல் நல்ல பங்களிப்பை கொடுத்து வந்திருக்கின்றனர். ஐபிஎல் பைனலிலும் இந்த பங்களிப்பு தொடர்ந்தது. 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 6.3 ஓவர்களில் 74 ரன்கள் குவித்தனர்.

குறிப்பாக, டெவான் கான்வெ 25 பந்துகளில் 47 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். டாப் ஆர்டரில் இவர் அமைத்துக் கொடுத்த அதிரடியான துவக்கம் அணியை வெற்றிக்கு எடுத்துச் சென்றுள்ளது. இதனால் ஆட்டநாயகன் விருது பெற்றார் டெவான் கான்வெ.

ஐபிஎல் பைனலில் ஆட்டநாயகன் விருது பெற்ற கான்வெ பேசியதாவது: ” சற்று பதட்டமாக உணர்கிறேன். இதற்காகத்தான் நீண்ட காலம் காத்திருந்தேன். இன்று சேஸ் செய்ய களமிறங்கியபோது, நான் மற்றும் ருத்து இருவரும் சேர்ந்து எப்படி இந்த இலக்கை அணுகப் போகிறோம் என்று திட்டமிட்டோம். அதன்படி நல்ல துவக்கம் அமைந்தது மற்றும் இறுதியில் வெற்றி பெற்ற அணையின் பக்கம் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது.

- Advertisement -

தனிப்பட்ட என்னுடைய கிரிக்கெட் கேரியரில் இதுதான் மிகச்சிறந்த வெற்றி. ஐபிஎல் பைனலை தவிர வேறு எந்த வெற்றி பெரியதாக இருந்திட முடியும். குறிப்பாக அனைத்து பாராட்டுக்களும் மைக் ஹஸ்ஸிக்கு செல்லும். அவர் சீசன் முழுவதும் என்னை பார்த்துக்கொண்ட மற்றும் வழிநடத்திய விதம் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவரை போன்று வீரரின் இடத்தை நிரப்புவது மகிழ்ச்சியை கொடுக்கிறது. அடுத்தடுத்த சீசன்களில் என்னுடைய பங்களிப்பை கொடுப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்.” என்றார்.