“5வது டெஸ்ட்.. இவரை வச்சு ஜெயிக்கிறோம்.. இந்தியாவுக்கு சம்பவம் இருக்கு” – மெக்கலம் பேட்டி

0
563
England

2022 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் மற்றும் பிரண்டன் மெக்கலம் தலைமையில் அதிரடியான முறையில் விளையாடுவதை பாணியாக வைத்து வெற்றி பெற்று வருகிறது.

இந்த அதிரடியான அணுகு முறையில் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு வரை ஒரு டெஸ்ட் தொடரை கூட இழந்தது கிடையாது. மேலும் ஆசிய நாடான பாகிஸ்தானில் வைத்து, பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று அசத்தி இருந்தது.

- Advertisement -

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியையும் அபாரமான முறையில் விளையாடி வென்றிருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து தொடரை வென்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற கருத்துக்களும் வெளிவந்தன.

முதல் டெஸ்ட் போட்டியின் இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணியின் துணை கேப்டன் ஒல்லி போப் அதிரடியாக 196 ரன்கள் குவித்து, இங்கிலாந்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் அதற்குப் பிறகு நான்கு டெஸ்ட் போட்டிகளில் அவர் ஒரே ஒரு முறைதான் 30 ரன்கள் கடந்தார். அவருடைய பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது.

ஏற்கனவே இங்கிலாந்து அணி ஒன்றுக்கு மூன்று என தொடரை இழந்து விட்டாலும் கூட, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டம் நடைபெற்று வருகின்ற காரணத்தினால், ஒவ்வொரு டெஸ்ட் போட்டிகளும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே கடைசி டெஸ்டிலும் வெற்றிக்கான போட்டி கடுமையாகவே இருக்கும்.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள பிரண்டன் மெக்கலம் ” போப் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் அறிவார். கடைசி டெஸ்டில் அவர் சில ரன்கள் பெற்றிருக்கிறார். மேலும் தான் செய்ய முடியாதது குறித்து அவர் கோபம் அடைந்திருக்கிறார். ஆனால் நான்காவது டெஸ்ட் கடைசி நாளில் களத்தில் அவர் கேப்டனுக்கு உதவி செய்ததையும் டைவ் அடித்ததையும் பாருங்கள்.

ஒருபயிற்சியாளராக, வீரர்கள் சொந்த செயல் திறனை பற்றி கவலைப்படாமல், தங்களிடம் இருக்கும் சிறந்ததை கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். போப் களத்தில் சிறந்த தலைமை பண்புகளை வெளிப்படுத்தினார். ஒரு நபராகவும், ஒரு அணியின் வீரராகவும் அவர் எந்த இடத்தில் இருக்கிறார்? என்பதை இது காட்டுகிறது.

இதையும் படிங்க : “ஆதரவு மட்டும் குடுங்க.. கப்பு வாங்கி சிலிர்க்க வைக்கிறேன்” – ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு வேண்டுகோள்

பாண்டிங், பீட்டர்சன் போன்றவர்கள் களத்தில் நுழைந்த பொழுதே வெறித்தனமாக இருப்பார்கள். ஆனால் இவர் எப்பொழுதும் அமைதியாக இருக்கக் கூடியவர். ஆடுகளத்தில் என்ன நடக்கிறது என்று பார்த்து செட்டாக அவருக்கு அந்த இடத்தில் டைம் தேவைப்படுகிறது. அவர் ரிதத்தை ஆட்டம் எப்படி நகர்கிறது என்று பார்த்து பெற வேண்டும். அவர் ஐந்தாவது டெஸ்டில் சிறந்த முறையில் திரும்பி வருவார்” என்று கூறியிருக்கிறார்.