“ஆதரவு மட்டும் குடுங்க.. கப்பு வாங்கி சிலிர்க்க வைக்கிறேன்” – ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு வேண்டுகோள்

0
262
Hardik

இந்த மாதம் 22 ஆம் தேதி துவங்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பும், ஐபிஎல் தொடர் குறித்தான பரபரப்பான பேச்சுகளும், கடந்த ஆண்டின் இறுதியிலேயே துவங்கி விட்டது.

இதற்கு முக்கியமான காரணமாக இருந்தது ஹர்திக் பாண்டியாவும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும்தான். முதலில் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் முறையில் கொண்டுவரப்பட்டார்.

- Advertisement -

இதற்கு அடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில், ஐபிஎல் வரலாறு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக உடனுக்குடன் ஹர்திக் பாண்டியா கொண்டுவரப்பட்டார்.

இது இந்திய மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் இந்த முடிவை ஏற்கவில்லை.

அவர்கள் தங்களுடைய எதிர்ப்பையும் கோபத்தையும் சமூக வலைதளங்களில் கடுமையான முறையில் வெளிப்படுத்தினார்கள். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கங்களை பின்தொடர்வதில் இருந்து வெளியேறினார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் குறித்து பேசி உள்ள ஹர்திக் பாண்டியா கூறும்பொழுது “ரசிகர்களின் அதிகப்படியான ஆதரவு மற்றும் அன்பிற்கு நான் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதம் ஆகும்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்புவது, எல்லாம் தொடங்கிய இடத்திற்கு மீண்டும் திரும்புவது போல் இருக்கிறது. சிறுவனாக நான் பரோடாவில் இருந்து மும்பைக்கு வந்த பொழுது, இந்த நகரம் எனக்கு வளர்ச்சியை கற்றுக் கொடுத்தது. இந்த நகரத்தின் அன்பும் போதனைகளும் விலைமதிப்பற்றவை.

இன்று நான் என்னை ஒரு கிரிக்கெட் வீரனாக கட்டமைத்துக் கொண்டு வருகிறேன். மும்பை எப்பொழுதும் உங்களுக்கு சிறப்பானவனாக இருக்க வேண்டும் என்ற கட்டளையை கொடுக்கிறது. இப்போது ஐபிஎல் தொடரில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மும்பை அணிக்கு திரும்பி வந்திருக்கிறேன்.

இதையும் படிங்க : 207 ரன் சேஸ்.. கடைசி ஓவரில் 12 ரன்.. திரில் போட்டியில் பங்களாதேஷை இலங்கை வென்று அசத்தல்

எங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல அதே பழைய ஆதரவை ரசிகர்களிடம் எதிர்பார்க்கிறேன். உறுதியாக இருங்கள், ஒவ்வொரு ரசிகர்களுக்கும் சிலிர்ப்பான ஒரு சீசனை நிச்சயம் கொடுப்பேன். இது நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அனுபவிக்கும் ஒரு பயணம்” என்று கூறியிருக்கிறார்.