“மெக்கலம் இருக்கிறார்.. அதனால அதை சொல்ல மாட்டேன்.. பிரச்சனை ஆயிடும்” – அக்சர் படேல் பேச்சு

0
163
Axar

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது. அவர்கள் பேட்டிங் செய்வதில் மட்டுமல்லாமல், பந்துவீச்சு திட்டங்களை அமைப்பது, ஒரு ரன்னை தடுப்பதாக இருந்தாலும் பீல்டிங்கில் முழு மூச்சுடன் செயல்படுவது முழுக்க முழுக்க அதிரடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த வருடங்களில் ஜோ ரூட் தலைமையில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி மிகவும் மோசமான தோல்விகளை உள்நாட்டிலும் சந்தித்தது. இதற்கு அடுத்து அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு பென் ஸ்டோக்ஸ் அந்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டார்.

- Advertisement -

அதே நேரத்தில் நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மக்களும் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு வந்தார். இந்த இரண்டு நியூசிலாந்தைச் சேர்ந்தவர்களும் ஒட்டுமொத்த இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறையை மாற்றி விட்டார்கள்.

பிரண்டன் மெக்கலமை செல்லமாக பாஸ் என்று அழைப்பார்கள். அவர் அறிமுகப்படுத்தியுள்ள அதிரடியான ஆட்ட முறைக்கு பாஸ்பால் என்று அழைக்கிறார்கள். இப்பொழுது இந்த இங்கிலாந்தின் அதிரடி டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறைக்கு இங்கிலாந்தை தாண்டியும் ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

டெஸ்ட் கிரிக்கெட் க்கு குறைந்து வரும் ரசிகர்களின் ஆதரவை தங்களால் முடிந்த அளவிற்கு இங்கிலாந்து அதிகரித்திருக்கிறது என்று கூறவேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டை வெற்றி தோல்வி பற்றி கவலை இல்லாமல் இப்படி அணுகும் ஒரு அணியை இதுவரை பார்க்கவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் இன்று பிசிசிஐ விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் தாண்டி மெக்கலம் போன்றவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 15பேர் கொண்ட இந்திய அணி.. முழு விபரங்கள்

விழா மேடையில் அக்ச்சர் படேல் அவருடைய பந்துவீச்சு ரகசியம் பற்றி கேட்கப்பட்டது. அப்பொழுது பேசிய அக்சர் படேல் “நான் என் வந்து வீச்சு குறித்து சொல்ல மாட்டேன். அது ஒரு முக்கியமான ரகசியம். நான் என்னுடைய வளர்ச்சியில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னால் இது குறித்து எதையும் வெளிப்படுத்த முடியாது. ஏனென்றால் இங்கே மெக்கலம் அமர்ந்திருக்கிறார்” என்று நகைச்சுவையாகக் கூறியிருக்கிறார்.