இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 15பேர் கொண்ட இந்திய அணி.. முழு விபரங்கள்

0
1049
ICT

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் துவங்குகிறது. இன்று தொடர் மார்ச் மாதம் வரையில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 7ஆம் தேதி இமாச்சல் பிரதேசம் தரம்சாலா மைதானத்தில் கடைசி ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிவுக்கு வருகிறது.

- Advertisement -

இந்தத் தொடருக்கு இங்கிலாந்து அணி ஏறக்குறைய ஒன்றரை மாதங்கள் முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது. அவர்கள் இந்த தொடருக்கு தனிக் கவனம் கொடுத்து இதுவரை தயாராகாத முறையில் தயாராகி வருகிறார்கள்.

இந்திய அணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா கேப்டன் ஆகவும், பும்ரா துணை கேப்டனாகவும் இருக்கிறார்கள். இந்திய அணிக்கு சமி கிடைக்கவில்லை. இதனால் ஆவேஸ் கான் சேர்க்கப்பட்டிருக்கிறார். மேலும் இசான் கிஷானை தேர்வு செய்யாமல் துருவ் ஜுரலை தேர்வு செய்திருக்கிறார்கள்.

அறிவிக்கப்பட்ட இந்த அணியில் இடம் பெற்று இருந்த நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி குடும்ப விஷயங்களுக்காக முதல் இரண்டு டெஸ்டில் விளையாட முடியாமல் அணியை விட்டு வெளியேறி இருக்கிறார். இவருக்கு இன்னும் மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.

- Advertisement -

இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் மிக முக்கியமாக சுழல் பந்துவீச்சு யூனிட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், மற்றும் குல்தீப் யாதவ் என நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

பேட்டிங் யூனிட்டை பொறுத்தவரையில் விராட் கோலி இல்லாத காரணத்தினால் தற்பொழுது கேஎல் ராகுல் இடம்பெற்று விளையாடுவார் என்று தெரிகிறது. பொதுவாக பேட்டிங் யூனிட் வலிமையாக காணப்படுகிறது, ஆனால் சுழல் பந்துவீச்சுக்கு மிக அதிக சாதகம் இருந்தால், எவ்வளவு பெரிய பேட்ஸ்மேன்களும் ஒன்றும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட்டுக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணி:

ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், ஸ்ரீகர் பாரத், அவேஷ் கான், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது சிராஜ், மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.