அர்ஸ்தீப் சிராஜ் வேண்டாம்.. இந்த 2 புது பசங்கள டி20 உலக கோப்பைக்கு கூட்டிட்டு போங்க – நவ்ஜோத் சிங் சித்து தேர்வு

0
33
Siraj

நடப்பு ஆண்டு 2024 ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் என இரு நாடுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் துவங்க இருக்கிறது. இந்த முறை இந்த உலகக் கோப்பை தொடரில் 20 நாடுகள் பங்கு பெறுகின்றன. இதற்கு இந்திய அணியில் இரண்டு புதிய இளம் வேகப்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என நவஜோத் சிங் சித்து கூறி இருக்கிறார்.

டி20 உலக கோப்பைக்கு கிரிக்கெட் நிர்வாகங்கள் தங்களுடைய அணிகளை கொடுப்பதற்கு கடைசி தேதியாக மே ஒன்றாம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்து மே 26 ஆம் தேதி வரையில், ஐசிசி வசம் கொடுக்கப்பட்ட அணியில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இதன் காரணமாக எப்படியும் எல்லா அணிகளும் ஏப்ரல் இறுதி வாரத்தில் தங்களுடைய அணிகளை ஐசிசி இடம் சமர்ப்பிக்கும் என்பது உறுதியானது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு ஏற்கனவே 75 சதவீதத்திற்கும் மேலான டி20 உலகக் கோப்பை இந்திய அணியை தேர்வு செய்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. மீதி சில இடங்களுக்கான தேர்வு ஐபிஎல் தொடரை வைத்து முடிவு செய்யலாம்.

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் குறித்து பேசிய நவ்ஜோத் சிங் சித்து “லக்னோ அணிக்காக விளையாடும் மயங்க் யாதவ் மற்றும் மோசின் கான் இருவருமே டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும். நான் தேர்வாளராக இருந்திருந்தால் இந்த இருவரையும் நிச்சயம் தேர்வு செய்திருப்பேன்.

மயங்க் யாதவ் மிகச் சிறப்பான வேகத்தை வைத்திருக்கிறார். அதே சமயத்தில் அவருடைய லைன் மற்றும் லென்த் மிகவும் கட்டுப்பாடான ஒன்றாக இருக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவர் உடல் தகுதியுடன் இருப்பார் என்றால் அவரை விட சிறந்த தேர்வு எதுவும் இருக்காது.

- Advertisement -

இதையும் படிங்க : ஹைதராபாத்த எப்படி ஜெயிக்கிறது.. சிஎஸ்கேவுக்கு ரூட்டு போட்டுக் கொடுத்த ஆர்சிபி.. மாற்றங்கள் நடக்குமா?

மோசின் கான் ஒரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர். எனவே அவர் இந்திய அணிக்கு கட்டாயம் தேவை. மேலும் அவர் உயரமானவராக இருப்பதால் ஆடுகளத்தில் இருந்து நல்ல பவுன்ஸ் பெறுகிறார். அவருடைய லைன் மற்றும் லென்த் எந்த பேட்டரையும் தொந்தரவு செய்யும்.நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் மிகவும் சிறப்பாக பந்து வீசிக்கொண்டு வருகிறார்” என்று கூறியிருக்கிறார்.