இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்த முறை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றும் என மேத்யூ ஹைடன் உறுதியாக கூறியிருக்கிறார்.
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை கடந்த இரண்டு முறையாக இந்திய அணி ஆஸ்திரேலியாலில் அந்த அணிக்கு எதிராக வென்று இருக்கிறது. இருந்த போதிலும் இந்த முறை ஆஸ்திரேலியா அணியே வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு வாரத்தில் மாறிய நிலைமைகள்
இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக உறுதியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் அணியாக இருந்தது. ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை தோற்றதின் காரணமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு குறைந்திருக்கிறது.
மேலும் உள்நாட்டில் 12 வருடங்களுக்குப் பிறகு ஒரு டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்திருப்பது வீரர்களிடையே தன்னம்பிக்கையையும் குறைத்து இருக்கிறது. இதெல்லாம் சேர்ந்து இந்த முறை ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி படுதோல்வி அடையும் என்று பலரும் கூறுவதற்கு காரணமாக மாறி இருக்கிறது.
ஆஸ்திரேலியா அணி உறுதியாக வெல்லும்
இது குறித்து மேத்யூ ஹைடன் கூறும் பொழுது ” ஆஸ்திரேலியா இந்த முறை வெல்லும் என்று நான் உறுதியாக கூறுகிறேன். மேலும் தற்போது இந்தியா எப்படி செல்கிறது என்பதையும் பாருங்கள். ஆஸ்திரேலியாவுக்கு முன் இருந்தது போல சொந்த நாட்டில் சாதக நிலை கிடையாது. ஏனென்றால் தற்போது டிராப் இன் எனப்படும் செயற்கை ஆடுகளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தொடரில் பெர்த், அடிலைய்டு மற்றும் மெல்போர்ன் மைதானங்களில் இப்படியான ஆடுகளங்கள் பயன்படுத்தப்படும்”
இதையும் படிங்க : கடைசி நியூஸி டெஸ்ட்.. கம்பீர் திடீரென களமிறக்கும் புதிய ரஞ்சி ஆல்ரவுண்டர்.. வெளியான தகவல்கள்
“எனவே சிட்னி மற்றும் பிரிஸ்பேன் இரண்டு மைதானங்களிலும் இயற்கையான ஆடுகளங்கள் இருக்கின்றன. இது மூன்றாவது மற்றும் ஐந்தாவது போட்டி நடக்கும் மைதானங்கள் ஆகும். இந்த இடத்தில் வித்தியாசமான கலவை அமையும். இதெல்லாம் சேர்ந்த அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி சாதகமற்ற சூழ்நிலையிலும் கூட இந்திய அணிக்கு எதிராக தொடரை கைப்பற்றும்” என்று கூறி இருக்கிறார்.






