இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் புதிய இளம் வீரர் ஒருவரை பயிற்சியாளர் கம்பீர் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது
நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் திடீரென கம்பீர் தலைமையிலான அணி நிர்வாகம் வாஷிங்டன் சுந்தரை களம் இறக்க அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார். இருந்த போதிலும் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது.
நியூசிலாந்துக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட்
அடுத்த மாதம் நவம்பர் ஒன்றாம் தேதி இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு கட்டாயம் அடுத்த போட்டியை வென்றாக வேண்டிய சூழ்நிலையில் இந்திய அணி இருக்கிறது.
இந்த நிலையில் ஓய்வு கொடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா ஓய்வில்லாமல் விளையாட வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். எனவே உள்நாட்டில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட வேண்டியது அவசியம் ஆகிறது.
கம்பீர் எடுத்திருக்கும் புதிய முடிவு
நடப்பு ரஞ்சி டெஸ்ட் டிராபியில் மும்பை அசாம் அணிகள் மோதிய போட்டியை பார்ப்பதற்கு தேர்வுக் குழுவில் இருக்கும் அஜய் ரத்ரா நேரடியாக சென்றார். டெல்லி அணிக்காக விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் கைப்பற்றியது மட்டும் இல்லாமல், பேட்டிங்கில் அதிரடியாக அரை சதம் அடித்து, இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட் கைப்பற்றி டெல்லி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இதையும் படிங்க : நியூஸி டெஸ்ட்.. இங்கிலாந்து அணி அறிவிப்பு.. முக்கிய வீரர் ஓய்வு.. இந்திய அணிக்கு இன்னொரு சிக்கல்
இந்த நிலையில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாகவும், மேலும் ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முன்பாக ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு சர்வதேச போட்டியை கொடுப்பதற்காகவும் பயிற்சியாளர் கம்பீர் முடிவு செய்திருப்பதாக செய்திகள் கூறுகிறது. எனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஹர்ஷித் ராணா அறிமுகம் ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது!






