மேட் ஹென்றி புது சாதனை.. ஆஸிக்கு நியூசிலாந்து பதிலடி.. ரச்சின் ரவீந்திரா லாதம் நம்பிக்கை

0
240
Henry

ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு நியூசிலாந்து சென்று அந்த அணியுடன் விளையாடி வருகிறது. இந்த தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் நேற்று துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பந்து வீசிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக நியூசிலாந்து அணியை 162 ரன்களில் சுருட்டியது. ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசில்வுட் 5 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 68 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 252 ரன்கள் எடுத்து சுருண்டது. ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் அதிகபட்சமாக பேட்டிங் ஃபார்மில் இல்லாமல் இருந்த லபுசேன் தாக்குப்பிடித்து விளையாடி 90 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்ச ஸ்கோராக பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் 28 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்து பேட் கம்மின்ஸ் 23 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரின் பங்களிப்பு இல்லாமல் இருந்திருந்தால் ஆஸ்திரேலிய 200 ரன்கள் தாண்டி இருக்காது.

நியூசிலாந்து அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்றி 23 ஓவர்கள் பந்துவீசி, 4 மெய்டன்கள் செய்து, 67 ரன்கள் விட்டுத் தந்து, 7 விக்கெட் கைப்பற்றி மிரட்டினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் வில் யங் 1 ரன்னில் வெளியேறினார். இதற்கு அடுத்து உள்ளே வந்த கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து கடைசி நேரத்தில் 51 ரன்களில் வெளியேறினார்.

இன்றைய நாள் முடிவில் டாம் லாதம் ஆட்டம் இழக்காமல் 65, ரச்சின் ரவீந்தரா 11 ரன்கள் எடுக்க, இரண்டு விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 134 ரன்கள் எடுத்து, 40 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

இதையும் படிங்க : “ப்பா!.. 22 வருடம் 700 விக்கெட்.. நாசர் ஹுசைன் அப்பவே சொன்னார்” – சச்சின் ஆண்டர்சனுக்கு வாழ்த்து

நியூசிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சிறந்த பந்துவீச்சாக மேட் ஹென்றி 67 ரன்களுக்கு ஏழு விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டேனியல் வெட்டேரி 1993 ஆம் ஆண்டு 89 ரன்களுக்கு 7 விக்கெட் கைப்பற்றியது சாதனையாக இருந்தது. நியூசிலாந்து அணி மேற்கொண்டு 200 ரன்கள் எடுக்கும் பொழுது இந்த டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பானதாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.