“ப்பா!.. 22 வருடம் 700 விக்கெட்.. நாசர் ஹுசைன் அப்பவே சொன்னார்” – சச்சின் ஆண்டர்சனுக்கு வாழ்த்து

0
123
Sachin

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்பொழுது தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் 41 வயதான வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 700 ஆவது விக்கெட்டை கைப்பற்றினார்.

187 வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்கின்ற அரிய சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார்.

- Advertisement -

டெஸ்ட் போட்டிக்கான வரவேற்பு ரசிகர்களிடையே குறைந்து வரும் காலகட்டத்தில், இனி ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகப்பந்து வீச்சாளராக நிகழ்த்தி இருக்கும் இந்த சாதனையை முறியடிக்க இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் வருவார் என்பது பெரிய அளவில் சந்தேகமே. எனவே காலம் முழுக்க இது நீடித்து நிலைக்க போகின்ற சாதனையாக அமைந்திருக்கிறது.

மேலும் 41 வயதில் ஒரு வீரர் கிரிக்கெட் விளையாடுவது என்பதே சாதனையான விஷயம்தான். இந்த வயதில் உடல் தகுதியை சரியாக வைத்திருப்பது மிகவும் கடினம். ஆனால் அதிக அளவு உழைப்பு தேவைப்படும் வேகப்பந்து வீச்சில் 21 வருடங்களாக தொடர்ந்து செயல்பட்டு வருவது என்பது அசாத்தியமான காரியம். இதையும் யாராலும் இனி கிரிக்கெட் உலகத்தில் முறியடிக்க முடியாது என்றே கூறலாம்.

2003 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆரம்பித்த ஜேம்ஸ் ஆண்டர்சனின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை, 21 ஆண்டுகள் தொடர்ந்து வந்து இன்னும் முடியாமல் நீண்டு கொண்டிருக்கிறது. அவர் அறிமுகமான காலத்தில் அறிமுகமான பிரண்டன் மெக்கலம் தற்பொழுது அவருக்கே பயிற்சியாளராக மாறியிருக்கும் அதிசயமே நடந்து விட்டது.

- Advertisement -

இந்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் “2002 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் பொழுது நான் பார்த்தேன். அவருக்கு பந்தில் நல்ல கண்ட்ரோல் இருந்தது. நாசர் உசைன் அப்பொழுதே அவர் குறித்து மிகவும் உயர்வாக பேசினார். அவர் முன்கூட்டியே கணித்திருந்தார்.

இதையும் படிங்க : பீல்டிங் வராத கேப்டன் ரோகித் சர்மா.. காரணம் என்ன?.. பிசிசிஐ வெளியிட்ட கவலையான விஷயம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்தி இருப்பது மிகப்பெரிய விஷயம். ஒரு வேகப்பந்துவீச்சாளர் 22 வருடங்களாக செயல்பட்டு எழுநூறு டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றுவது என்பது நடக்கும் வரையில் கற்பனையானதாகவே அவருக்கு இருந்திருக்கும். இது மிகவும் அற்புதமான ஒன்று” என பாராட்டி இருக்கிறார்.