ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது போட்டியை வென்றிருந்தால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுகு தகுதி பெற்று இருக்க முடியும். ஆனால் தற்போது இந்திய அணி தோல்வி முகத்தில் இருக்கிறது.
குறிப்பாக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ரோகித் சர்மா 23 பந்துகளை எதிர் கொண்டு 12 ரன்களில் ஆட்டம் இழந்தார். முதல் இன்னிங்சில் ரோகித் இறங்கி வந்து சுழற் பந்துவீச்சாளரை அடிக்க முயன்ற போது அவர் பந்தை தவற விட்டார். அது விக்கெட் கீப்பரிடம் பிடிபட்டு ஸ்டம்பிட் ஆனார். இந்தப் 12 ரன்கள் அடிப்பதற்கு இரண்டு முறை தனது அதிர்ஷ்டத்தால்( நடுவரின் உதவியால்) தப்பித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய வீரர் மேத்தீவ் ஹைடன், ரோகித் விளையாடியது நிச்சயம் மறக்க வேண்டிய ஷாட். அது பற்றி உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். இது டெஸ்ட் கிரிக்கெட் என்பதை அனைவரும் மறந்து விடுகிறார்கள். கேப்டனாக நீங்கள் தான் ஆணியை முன் நின்று வழிநடத்த வேண்டும்.
நீங்கள் ஆட்டமிழந்த முறையில் பின்னோக்கி யோசித்துப் பார்த்தால் ரோகித்தே வருத்தப்படுவார். அவர் கொஞ்சம் சோம்பேறித்தனமாக அந்தப் பந்தை எதிர்கொண்டார். என்ன நடக்கப் போகிறது என்ற அலட்சியமும் அதற்கு காரணம் என்று சொல்லலாம். டாசை வென்று பெரிய தாக்கத்தை நீங்கள் ஏற்படுத்த நினைத்தீர்கள். ஆஸ்திரேலிய அணி மீது ஆதிக்கம் செலுத்த இந்தியா நினைத்தது.
மறுபுறம் ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் இல்லை, அந்த அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் இல்லை. அந்த அணிதான் பல்வேறு விஷயங்களில் இழந்து இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வது கூட கடினமாக ஆக இருந்தது. இவ்வளவு கடினங்களையும் மீறி ஆஸ்திரேலியா அணி தற்போது வெற்றியின் அருகே இருக்கிறது. என்னைக் கேட்டால் இந்திய அணி அலட்சியமாக செயல்பட்டது . நாம் தான் வென்று விட்டோமே என்று திமிர் தான் இந்திய அணியிடம் இருந்தது.
இதனால் தான் அவர்கள் தற்போது தோல்வி பெறும் தருவாயில் இருக்கிறார்கள். ஹைடனின் கருத்தை ஆமோதித்துள்ள இந்திய முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட்டை வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டிய நேரிட்டது. ஆனால் நமது பேட்ஸ்மேன்கள் சுலபமாக தங்களது விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா கொடுத்துவிட்டார்கள்.
அதிரடியாக விளையாடுகிறேன் என்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து விட்டார்கள். முதல் இன்னிங்ஸ் ஆடிய பிறகு ஆடுகளம் எப்படி இருக்கும் என்று கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்திருக்கும். இதனால் இரண்டாவது இன்னிங்சில் அதற்கு தகுந்தார் போல் உங்களின் ஆட்டத்தை நீங்கள் மாற்றிக் கொண்டு விளையாடி இருக்க வேண்டும். ஆனால் இந்தியா அதனை செய்யவில்லை என்று கவாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.