அம்பதி ராயுடு ஆர்சிபிக்கு போட்ட உள்குத்து வீடியோ.. கமெண்டில் பதிரனா செய்த சம்பவம்.. என்ன காரணம்?

0
913
Pathirana

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் லீக் சுற்றில் தங்கள் கடைசிப் போட்டியில் மோதிக்கொண்ட பொழுது நடந்த நிகழ்ச்சிகள் பெரிய சர்ச்சையாக தொடர்ந்து வருகின்றன. தற்பொழுது அம்பதி ராயுடு ஆர்சிபி அணிய விமர்சிக்கும் விதமாக மறைமுகமாக வெளியிட்ட பதிவு ஒன்றில் மதிஷா பதிரனா கமெண்ட் செய்தது வைரலாகி வருகிறது.

ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் இறுதியாக மோதிக்கொண்ட போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற, சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றுவாய்ப்பில் இருந்து வெளியேறியது.

- Advertisement -

இந்த போட்டியின் போது விராட் கோலி களத்தில் ரசிகர்களை பார்த்து சைலன்ஸ் என்கின்ற விதத்தில் செய்தது, கைகுலுக்க நேரம் கடந்தும் வராதது, மேலும் ஆர்சிபி ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே சிஎஸ்கே ரசிகர்களிடம் தவறாக நடந்து கொண்டது என நிறைய சர்ச்சைகள் சென்று கொண்டிருக்கிறது.

இதற்கடுத்து வெற்றிக்குப் பிறகு ஒரு வீடியோவில் தினேஷ் கார்த்திக் மகேந்திர சிங் தோனி 110 மீட்டர் சிக்சர் அடித்து வெளியே வந்து சென்று விட, புதிய பந்து கிடைத்தது அதனால் தான் எங்களால் சிறப்பாக பந்து வீச முடிந்து வெற்றி பெற முடிந்தது என்று பேசி இருந்தார். இது தோனியால் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது என்கின்ற ரீதியில் வெளியில் பரவியது.

இதேபோல் ஒரு வீடியோவில் மதிஷா பதிரனா டிக்கெட் எடுத்தால் கொண்டாடுவது போல கேமரூன் கிரீன் மற்றும் இன்னும் ஒரு ஆர்சிபி வீரர் வீடியோவில் அதேபோல் செய்திருந்தார்கள். இது எல்லாம் சேர்ந்து போட்டி முடிந்தும் வெளியில் சச்சரவுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆர்சிபி அணி ராஜஸ்தான் அணியிடம் தோற்க தற்பொழுது சிஎஸ்கே தரப்பு அவர்களை திருப்பி அடித்து வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் 50 ராய்டு ஆர்சிபி அணி குறித்து அந்தப் போட்டியின் போது இருந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இன்றும் கூட ஆக்ரோஷமாக கொண்டாடுவதும் சிஎஸ்கே அணியை வெல்வது மட்டுமே ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவாது என்று தாக்கி பேசியிருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று பேருந்தில் சிஎஸ்கே அணி திருப்பி வந்த பொழுது, ஐந்து முறை வென்றதைக் குறிக்கும் விதமாக சிஎஸ்கே வீரர்கள் ரவிந்திர ஜடேஜா ரகானே ருத்ராஜ் போன்றவர்கள் கொண்டாடினார்கள்.

இதையும் படிங்க: தோனி ஃபேர்வல்.. ஆர்சிபி ரசிகர்கள் போட்ட ஆட்டம்.. தெறி மாஸ் ட்விஸ்ட் வைத்த சிஎஸ்கே சிஇஓ

தற்போது இந்த வீடியோவை அம்பதி ராயுடு ஆர்சிபி அணியினரிடம் ஒரு கோப்பை கூட இல்லை என்பதை சுட்டிக்காட்ட மறைமுகமாக பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் இந்தப் பதிவில் அம்பதி ராயுடு பகிர்ந்த நோக்கத்தை உணர்ந்த பதிரனா வெளிப்படையாகவே சிரிக்கும் பொம்மையை கமெண்டில் பதிவு செய்திருக்கிறார். ஆர்சிபி அணியை நேரடியாகவே பதிரனா கலாய்த்திருக்கிறார். தற்பொழுது இது சிஎஸ்கே ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.