தோனி ஃபேர்வல்.. ஆர்சிபி ரசிகர்கள் போட்ட ஆட்டம்.. தெறி மாஸ் ட்விஸ்ட் வைத்த சிஎஸ்கே சிஇஓ

0
231
Dhoni

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அத்தோடு தோனி ஓய்வு பெற இருந்த நிலையில் ரசிகர்களுக்காக மேலும் ஒரு ஆண்டு கூடுதலாக விளையாடுவார் என்று கூறி விளையாடினார். இந்த நிலையில் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பேசியிருக்கிறார்.

தோனி தற்பொழுது 40 வயதை கடந்து கால் மூட்டில் அறுவை சிகிச்சை செய்து ஓடுவதற்கு சிரமப்படுகிறார். இதன் காரணமாக அவர் தொடர்ந்து விளையாடுவது சிரமம் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் அவர் பேட்டிங்கில் சர்துல் தாக்கூருக்கும் கீழே வந்த நிகழ்வுகளும் நடந்தது.

- Advertisement -

அதே சமயத்தில் கடைசி இரண்டு மூன்று ஓவர்கள் அவர் விளையாடினாலும் கூட, பந்தை அவர் கனெக்ட் செய்யும் விதம் ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு மிகச் சிறப்பாக இருக்கிறது. இதை அவர் உள்ளே வந்து முதல் பந்தில் இருந்து செய்கிறார். அதேசமயம் கான்வே இருந்திருந்தால் சில போட்டிகளில் தோனி ஓய்வு எடுத்திருக்கவும் வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறியதால், ஆர் சி பி ரசிகர்கள் தோனிக்கு தாங்கள் சிறப்பான ஃபேர்வெல் கொடுத்து விட்டதாக சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள். தற்பொழுது இதற்கு ட்விஸ்ட் வைக்கும் விதமாக காசி விஸ்வநாதன் முக்கிய தகவல் ஒன்றை கூறி இருக்கிறார்.

தோனியின் ஓய்வு குறித்து பேசி இருக்கும் காசி விஸ்வநாதன் “தோனி எடுக்கும் முடிவுகளை நாங்கள் எப்பொழுதும் மதித்து வருகிறோம். அவரின் ஓய்வு குறித்து அவரிடமே விட்டு விட்டோம். அவரைப்பற்றி உங்களுக்கே தெரியும், அவர் எப்போதும் முடிவுகளை சரியான நேரத்தில் அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : SRH vs RR.. மழைக்கான வாய்ப்பு.. போட்டி நடக்காவிட்டால்.. பைனலுக்கு போவது யார்?.. முழு தகவல்கள்

அவர் முடிவெடுக்கும் பொழுதுதான் எங்களுக்கும் தெரியவரும் என்று நம்புகிறோம். அதே சமயத்தில் அவர் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு விளையாட வருவார் என்றும் நம்புகிறோம். இதுதான் என்னுடைய பார்வையாகவும், ரசிகர்களுடைய நம்பிக்கையாகவும் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.