இந்திய கிரிக்கெட்

ஸ்பின் நல்லா ஆடறது நம்ம ஆளுங்க இல்ல.. இவர்தான் சிறப்பா என்னை ஆடினார் – அஸ்வின் கருத்து

​இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின், நியூசிலாந்து மற்றும் இந்தியா டெஸ்ட் தொடரின் நடுவே சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார் என்பது குறித்தும், இந்திய நட்சத்திர வீரர்களின் பேட்டிங் ஸ்டைல் குறித்தும் தனது யூடியூப் சேனல் நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.

- Advertisement -

​இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “ஜோ ரூட். அவர் நல்ல பொசிஷன்களுக்குச் செல்வார், அநேகமாக என்னை மிகச் சிறப்பாக ஃபேஸ் செய்தவர் அவர்தான். சப்-கண்டினெண்ட் பேட்ஸ்மேன்களை மறந்துவிடுங்கள். கன்ட்ரி மைல் வித்தியாசத்தில் அவர்தான் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்ளும் பெஸ்ட் பிளேயர்” என்று கூறி இருக்கிறார்.

​இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் மேலும் பேசும்போது “ரோகித் சர்மா களத்திலும் சரி, வெளியேயும் சரி எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் இருப்பார். அவர் வல்னரபிளாக இருப்பார், அது இயல்பானது. அவர் அதிகம் யோசிப்பதில்லை. ஆனால் விராட் கோலி எப்போதுமே எல்லாவற்றையும் தயாராக வைத்திருப்பார். அது மிகவும் மெடிகுலஸாக இருக்கும். அவரது கிட் பேக் கூட எல்லாவற்றையும் ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கும்”

“ஆனால் ரோகித்தின் கிட் பேக் அப்படி இருக்காது. நாம் யாரையும் ஜட்ஜ் செய்யக்கூடாது, இரண்டையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். விராட்டிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் அந்த மாதிரி இருக்க விரும்பவில்லை என்றால், ரோகித்திடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -
Published by