மாஸ் திட்டம்போட்ட வெஸ்ட் இண்டீஸ்.. டி20 அணியில் அதிரடி வீரர் சேர்ப்பு.. உலககோப்பைக்கு ஸ்கெட்ச்!

0
1313
WI

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை முடித்துக் கொண்டு இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் தலா ஒரு போட்டியை இரண்டு அணியும் வென்று இருக்க, நேற்று நடைபெற்ற தொடரின் கடைசிப் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் வென்று தொடரையும் கைப்பற்றியது.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கு தகுதிப் பெற முடியாமல், கடந்த இரண்டு மாதங்களாக வெறுமனே இருந்த வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட், உலகக் கோப்பை முடிந்து நடைபெற்ற முதல் தொடரை வென்று கொஞ்சம் திருப்திப்பட்டு இருக்கிறது. ஆனால் இங்கிலாந்து அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் தொடர்ந்து சோகம் நீடிக்கிறது.

இந்த நிலையில இரு அணிகளும் அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கின்றன. மேலும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கின்ற காரணத்தினால், இந்த டி20 தொடர் இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் சொந்த நாட்டில் டி20 தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ரோமன் பவல் கேப்டனாக தொடர்கிறார். ஷாய் ஹோப் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஜான்சன் சார்லஸ் கழட்டிவிடப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

அதே சமயத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் திரும்ப வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். சொந்த நாட்டில் நடக்கும் டி20 உலகக்கோப்பைக்கு இது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

கடந்த முறை இந்திய அணிக்கு எதிராக உள்நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 தொடரில் இடது கை சுழற் பந்துவீச்சாளர் குடகேஷ் மோட்டி சேர்க்கப்படவில்லை. அவர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு அவரை வெஸ்ட் இண்டீஸ் சேர்த்திருக்கிறது. மொத்தத்தில் புதிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் புத்திசாலித்தனமாகவும் மிக வேகமாகவும் உலகக்கோப்பைகளுக்கு தயாராகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி :

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை முடித்துக் கொண்டு இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் தலா ஒரு போட்டியை இரண்டு அணியும் வென்று இருக்க, நேற்று நடைபெற்ற தொடரின் கடைசிப் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் வென்று தொடரையும் கைப்பற்றியது.

ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கு தகுதிப் பெற முடியாமல், கடந்த இரண்டு மாதங்களாக வெறுமனே இருந்த வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட், உலகக் கோப்பை முடிந்து நடைபெற்ற முதல் தொடரை வென்று கொஞ்சம் திருப்திப்பட்டு இருக்கிறது. ஆனால் இங்கிலாந்து அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் தொடர்ந்து சோகம் நீடிக்கிறது.

இந்த நிலையில இரு அணிகளும் அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கின்றன. மேலும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கின்ற காரணத்தினால், இந்த டி20 தொடர் இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் சொந்த நாட்டில் டி20 தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ரோமன் பவல் கேப்டனாக தொடர்கிறார். ஷாய் ஹோப் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஜான்சன் சார்லஸ் கழட்டிவிடப்பட்டிருக்கிறார்.

அதே சமயத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் திரும்ப வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். சொந்த நாட்டில் நடக்கும் டி20 உலகக்கோப்பைக்கு இது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

கடந்த முறை இந்திய அணிக்கு எதிராக உள்நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 தொடரில் இடது கை சுழற் பந்துவீச்சாளர் குடகேஷ் மோட்டி சேர்க்கப்படவில்லை. அவர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். இந்த முறை இவர் சேர்க்கப்பட்டிருக்கிறார். புதிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் மிகச் சரியாக உலகக் கோப்பைகளை நோக்கி பயணப்பட ஆரம்பித்திருக்கிறது!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டிஸ் அணி :

ரோவ்மன் பவல் (கேப்டன்), ஷாய் ஹோப் (துணை கேப்டன்), ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹோசின், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸ்ஸல் ரொமாரியோ ஷெப்பர்ட்.