6 வருடங்களுக்கு பிறகு ஆஸி தொடரில் நடக்கும் மாஸ் சம்பவம்.. ரோகித் ஹேப்பி.. தொடரும் அதிரடிகள்!

0
3530
Rohit

தற்போது இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக, உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

நடக்க இருக்கும் இந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. முதல் இரண்டு போட்டிகளுக்கு ஒரு அணியும், மூன்றாவது மற்றும் கடைசி போட்டிக்கு ஒரு அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த அணியில் 20 மாதங்களுக்கு பிறகு இந்திய ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தரப்பட்டிருக்கிறது. மேலும் அவருடன் சேர்த்து வாஷிங்டன் சுந்தரும் இடம்பெற்று இருக்கிறார்.

முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங் யூனிட்டில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஓய்வு எடுக்கின்ற காரணத்தினால், ருதுராஜுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

மகேந்திர சிங் தோனி கேப்டன்சி காலத்தில் இந்திய அணியின் சுழற் பந்து வீச்சு துறையை விரல் சுழற் பங்கு வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் தலைமையேற்று நடத்தி வந்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து விராட் கோலி காலத்தில் குல்தீப் யாதவ் மற்றும் சாகல் என மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்கள் பக்கம் பார்வை திரும்பியது. இதன் காரணமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் தங்கள் வாய்ப்புகளை இழந்தார்கள்.

பின்பு ஜடேஜா மட்டும் தன் ஆல்ரவுண்ட் திறமையை காட்டி ஒருநாள் கிரிக்கெட்டுக்குள் வந்துவிட்டார். இவரின் வருகை சாகல் இடத்தை பறித்துவிட்டது. இறுதியாக அஸ்வினும் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பெறுவதில்லை.

இந்த நிலையில் ஆறு வருடங்களுக்கு பிறகு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள். இந்த பழைய கூட்டணி எப்படியான தாக்கத்தை தரும் என்று பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

அணி தேர்வு குறித்து பேசி உள்ள கேப்டன் ரோஹித் சர்மா “ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் எந்த அளவுக்கு இருக்கிறார் என்று பார்ப்பதற்கு எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்காகவே அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அணியில் தேர்வு செய்யப்படும் எல்லா வீரர்களுக்கும் விளையாடும் வாய்ப்பையும் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஏனென்றால் இறுதிப்போட்டி வரை சேர்த்து உலகக் கோப்பையில் ஒரு அணி 11 போட்டிகள் விளையாட வேண்டும். எல்லா வீரர்களுக்கும் விளையாட வாய்ப்பு கொடுக்கும் பொழுதுதான் பென்ஞ் வலிமை மிகவும் சிறப்பாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!