தில்லாலங்கடி வேலை செய்த ஆஸி வீரர்.. அழைத்து கண்டித்த நடுவர்

0
402

கிரிக்கெட் பொறுத்தவரை ஆஸ்திரேலிய வீரர்கள் எப்போதுமே தில்லாலங்கடி வேலை செய்வதில் பிரபலமானவர்கள். பந்தை சேதப்படுத்தி ஸ்மித்,வார்னர் உள்ளிட்ட வீரர்கள் ஓராண்டு வரை தடை பெற்றது உங்கள் அனைவருக்கும் ஞாபகம் இருக்கலாம் .

- Advertisement -

ஆனால் விதிகளில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி சேட்டை செய்வதில் ஆஸ்திரேலிய வீரர்கள் வல்லவர்கள். குறிப்பாக களத்தில் எதிரணி வீரர்களின் கவனத்தை திசை திருப்பி தங்களது காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். இந்தூர் டெஸ்டில் இரண்டாம் நாளில் இந்திய அணி பேட்டிங் செய்யும்போது பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்கும் போது விக்கெட் கீப்பர் தேவையில்லாமல் ஸ்டம்பிங் செய்தார்.

அதற்கு ஸ்மித் நடுவரிடம் அவுட் கேட்க நடுவர்கள் தங்களோடு ரிவ்யூவை பயன்படுத்தி இது அவுட் இல்லையா என்று பார்க்கும்போது பேட்டில் பந்து பட்டதா இல்லையா என்று முதலில் பார்த்தார்கள். இதன் மூலம் ஸ்மித் தன்னுடைய டி ஆர் எஸ் ஐ பயன்படுத்தாமல் நடுவர்களை மறைமுகமாக பயன்படுத்திக் கொண்டு காரியத்தை சாதிக்க பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

- Advertisement -

இந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை வீழ்த்த அஸ்வின் போராடிக் கொண்டிருந்தார். அப்போது பந்தை வேகமாக வீசுவதற்காக அஸ்வின் நீண்ட தூரத்திலிருந்து ஓடி வந்து போடாமல் ஸ்டெம்ப் அருகே நின்று கொண்டு பந்து வீசினார். இதனைப் புரிந்து கொண்ட மார்னஸ்  அஸ்வின் பந்துவீசுவதற்கு முன்பு நேரத்தை கடத்துவதற்காக ஹெல்மெட்டை சரி செய்வது, கையுரையை சரி செய்வது என தேவையில்லாத சேட்டைகளை செய்தார்.

இதை பார்த்த ரோகித் சர்மா ஏதோ மார்னஸ் லாபஸ்சேனிடம் கேட்டார். அப்போது களத்தில் இருந்து நடுவர் மார்னசை அழைத்து நேரத்தை தேவையில்லாமல் வீணடிக்க வேண்டாம் என அறிவுறுத்தினார். இதனால் சிறிது நேரம் போட்டி தடைப்பட்டது. விரைவாக பந்துவீசி நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என அஸ்வின் நினைக்க அதனை முறியடித்து கொண்டு விதமாக மார்னஸ் இந்த யுத்தியை பயன்படுத்தினார்.

விக்கெட் வீழ்த்த அஸ்வின் போட்ட பிளான் வெற்றி அடையவில்லை. மாறாக ஆஸ்திரேலிய வீரர்கள் அவருடைய பந்துவீச்சை அடித்து ரன்களை குவித்தார்கள். அஸ்வின் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரையும் அடித்த மார்னஸ் அதன்பிறகு அஸ்வின் வீசிய இரண்டு ஓவர்களில் மூன்று பவுண்டரிகளை அடித்து ரன் சேர்த்தார். இதனால் ஒன்பதாவது ஓவர் முடிவில் 13 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலியா 15வது ஒரு முடிவில் 56 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -