கடைசி ஓவர் வரை நடந்த போராட்டம் வீண்; அரையிறுதி சுற்றுடன் வெளியேறியது ஜொகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்!

0
4704

சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் அரையிறுதி சுற்றில் ஜொ-பர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சவுத் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளில் அரையிறுதி சுற்று நடைபெற்று முடிந்திருக்கிறது. முதல் அரையிறுதி போட்டியில் பார்ல் ராயல்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதின. இதில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

- Advertisement -

இரண்டாவது அரையிறுதி போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், ஜொபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணிக்கு துவக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும், கேப்டன் மார்க்ரம்-ஹெர்மன் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தது.

அதிரடியாக ஆடிய கேப்டன் மார்க்ரம் 58 பந்துகளில் 100 ரன்கள் விளாசி ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெடுகள் இழப்பிற்கு 213 ரன்கள் அடித்தது.

மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்வதற்கு முக்கிய வீரராக பார்க்கப்பட்ட கேப்டன் டு பிளசிஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்தன.

- Advertisement -

நான்காவது வீரராக களமிறங்கிய ரிஷா ஹென்ட்ரிக்ஸ் ஒரு முனையில் அதிரடியாக விளையாட, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்து வந்தது. ஹென்றிக்ஸ் துரதிஷ்டவசமாக 96 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

கடைசி ஓவர் வரை போராடிய ரொமாரியோ ஷெப்போர்ட் 14 பந்துகளில் 38 ரன்கள் விளாசியும், சூப்பர் கிங்ஸ் அணியின் போராட்டம் வீண் ஆனது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசஸ் ஈஸ்டர்ன் கேப் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இறுதிப் போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலபரிட்சை மேற்கொள்கின்றன. வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி இறுதிபோட்டி நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 9 மணிக்கு துவங்கும்.