செமி-பைனல் பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றம்; சிஎஸ்கே வீரர் விளையாடுகிறார்!

0
1166

பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் செமி-பைனல் போட்டியில் விளையாடவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இவருக்கு மாற்று வீரரை இங்கிலாந்து அணி நிர்வாகம் தற்போது அறிவித்திருக்கிறது.

டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதி சுற்று நடைபெற்று வருகிறது. முதல் அரை இறுதி போட்டி நவம்பர் 9ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

- Advertisement -

இரண்டாவது அரையிறுதி போட்டி நவம்பர் 10ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை மேற்கொள்கின்றன. இரு அணிகளும் நேற்று மாலை வரை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இரு தினங்களாக நடைபெற்று வரும் இப் பயிற்சியின்போது இங்கிலாந்து வீரர் மார்க் வுட் மற்றும் டேவிட் மலான் இருவருக்கும் தொடை பகுதி மற்றும் கையில் மூட்டு பகுதி முறையே காயம் ஏற்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் இப்படி காயம் காரணமாக வெளியில் இருப்பது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவை தந்து இருக்கிறது. ஏனெனில் இந்த உலகக் கோப்பையில் இதுவரை 9 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். மேலும் இவரது எக்கனாமி 7.71 மட்டுமே.

- Advertisement -

பந்துவீச்சில் இந்திய அணிக்கு இவர் அச்சுறுத்தலாக இருப்பார் என்று கணிப்புகளையும் முன்னாள் வீரர்கள் கொடுத்து வந்தனர். இத்தகைய சூழலில் இவர் காயம் காரணமாக வெளியேறி உள்ளதால் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். இவருக்கு மாற்று வீரரை தற்போது அறிவித்திருக்கிறது இங்கிலாந்து அணி நிர்வாகம்.

பயிற்சியின் போது விரலில் ஏற்பட்ட காயத்தினால் வெளியில் அமர்ந்திருந்த இங்கிலாந்தின் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கிரிஷ் ஜோர்டன் தற்போது மார்க் வுட்டுக்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தியாவுடன் நடைபெறும் செமி பைனல் போட்டியின் பிளேயிங் லெவனில் இவர் இருப்பார் என்ற தகவல்களும் வந்திருக்கிறது. மற்றொரு இங்கிலாந்து வீரர் டேவிட் மலானுக்கு மாற்று வீரராக ஃபில் சால்ட் உள்ள எடுத்து வரப்பட உள்ளார் என்ற தகவல்களும் தற்போது வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.