வீடியோ.. கிரிக்கெட் விதியை மறந்த லாபுசாக்னே… அடுத்த பந்தில் அவுட்.. ஆஸ்திரேலியாவில் நடந்த அரிய நிகழ்வு

0
285

அண்மை காலங்களில் சர்வதேச கிரிக்கெட் முதல் லீக் கிரிக்கெட் வரை பேட்ஸ்மேன்கள் வித்தியாசமான முறைகளில் ஆட்டமிழந்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஃபீல்டிங்கை தடை செய்ததற்காக பேட்ஸ்மேன்களுக்கு அவுட் கொடுக்கப்படுவது நடைமுறைக்கு வந்தது. அதன்பின் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கில் வாஹன் உள்ளிட்டோர் அவுட்டாகினர்.

அண்மையில் கூட நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முஷ்ஃபிகுர் ரஹிம் ஃபீல்டிங்கை தடை செய்ததற்காக அவுட் கொடுக்கப்பட்டார். அதேபோல் உலகக்கோப்பை தொடரின் போது பேட்டிங் செய்வதற்கு தாமதமாக வந்ததற்காக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட் கொடுக்கப்பட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் கிரிக்கெட்டின் விதியை மீறியதன் காரணமாக பிக் பேஷ் தொடரில் லபுஷேன் அவுட்டாகிய வெளியேறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்று பிக் பேஷ் தொடரின் 32வது லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணியை எதிர்த்து பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணி கேப்டன் கவாஜா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்பின் களமிறங்கிய பிரிஸ்மேன் ஹீட்ஸ் அணி, 9 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 72 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 4வது விக்கெட்டுக்கு லாபுசாக்னே – சாம் பில்லிங்ஸ் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் இணைந்து 10வது ஓவரில் 13 ரன்களை விளாசினர். அந்த ஓவரின் கடைசி பந்தில் லாபுசாக்னே ஒரு ரன்னை எடுத்தார்.

இதன்பின் கிரிக்கெட் விதிகளின் படி லாபுசாக்னே தான் அடுத்த ஓவரின் முதல் பந்தை ஸ்ட்ரைக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் கிரிக்கெட் விதிகளுக்கு மீறி லான்ஸ் மாரிஸ் வீசிய 11வது ஓவரை சாம் பில்லிங்ஸ் சந்தித்தார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே பில்லிங்ஸ் ஒரு ரன்னை எடுத்து மறுமுனைக்கு செல்ல, 2வது பந்திலேயே லாபுசாக்னே 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

கிரிக்கெட் விதிகளுக்கு மாறாக செயல்பட்டதை நடுவர்கள், எதிரணி வீரர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனையறிந்த வர்ணனையாளர்கள் உடனடியாக களத்தில் இருந்த அனைவரும் கண்டுகொள்ளாததால் அதிர்ச்சியடைந்தனர். ஒருவேளை அந்த ஓவரின் முதல் பந்தை லாபுசாக்னே எதிர்கொண்டிருந்தால் விக்கெட்டாகாமல் இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளது.

இதன்பின் களமிறங்கிய மைக்கில் நெசர் 30 பந்துகளில் அதிரடியாக 3 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 64 ரன்களை விளாசி அசத்தினார். இதன் காரணமாக பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களை சேர்த்தது. சமீப காலங்களில் கிரிக்கெட் விதிகளை வீரர்கள் மறந்து வருவது அதிகரித்து வருகிறது.